சென்னை மாநகராட்சி மேயர் பிரியா  கோப்புப்படம்
தமிழ்நாடு

காலை உணவுத் திட்டத்தை தனியாருக்கு வழங்குவது குறித்து பரிசீலித்து முடிவு: மேயர் பிரியா

பள்ளிகளில் மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தை தனியாருக்கு வழங்குவது குறித்து பரிசீலித்து முடிவு என சென்னை மேயர் பிரியா கூறியுள்ளார்.

DIN

பள்ளிகளில் மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தை தனியாருக்கு வழங்குவது குறித்து பரிசீலித்து முடிவு செய்யப்படும் என்று சென்னை மேயர் பிரியா கூறியுள்ளார்.

சென்னையில் அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்திற்கு உணவு தயாரிக்கும் பணியினை தனியாருக்கு வழங்க சென்னை மாநகராட்சி முயற்சி செய்து வருகிறது. இதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது.

இதற்கு பாமக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், இதுகுறித்து பரிசீலித்து முடிவு செய்யப்படும் என சென்னை மேயர் பிரியா கூறியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

'காலை உணவுத் திட்டத்திற்கான உணவு தயாரிக்கும் பணியினை தனியாருக்கு வழங்க எதிர்ப்பு எழுந்துள்ளது.

அரசாணையின்படியே காலை உணவுத் திட்டத்திற்கு தனியாரிடம் டெண்டர் கோரப்பட்டுள்ளது.

எனினும் முதல்வர் மற்றும் துறை அமைச்சரிடம் இதுகுறித்து பேசி பரிசீலித்து இறுதி முடிவு எடுக்கப்படும்' என்றார்.

மேலும் சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் பெண்கள் சென்ற காரை, மற்றொரு காரில் இருந்த மர்ம நபர்கள் துரத்திய சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்ததுடன் 'சென்னையில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை' என்று கூறின.

இதற்கு பதிலளித்த மேயர் பிரியா, "சென்னை, பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக உள்ளது. அதற்கான அங்கீகாரம் பெற்றுள்ளது.

பெண்களின் பாதுகாப்புக்காகவும் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் திமுக அரசு பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை, ஜெய்ப்பூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள்

காா் மோதியதில் தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்: 3 போ் படுகாயம்

ஒசூரில் ‘நலம்காக்கும் ஸ்டாலின்’ திட்டம் 1,962 போ் பங்கேற்பு

நீதிமன்றத்துக்கு தவறான தகவல்: ரயில்வே காவல் ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

பட்டியல் இனத்தவருக்கு ஆதித்தமிழா் என ஜாதி சான்று கோரிய மனு முடித்துவைப்பு

SCROLL FOR NEXT