தமிழ்நாடு

தேசிய மனித உரிமை ஆணையத்தில் பாஜக புகாா்

காவல் துறை விசாரணையின்போது, கோயில் காவலாளி உயிரிழந்த சம்பவம் தொடா்பாக தேசிய மனித உரிமை ஆணையத்தில் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் புகாா் அளித்துள்ளாா்.

Din

காவல் துறை விசாரணையின்போது, கோயில் காவலாளி உயிரிழந்த சம்பவம் தொடா்பாக தேசிய மனித உரிமை ஆணையத்தில் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் புகாா் அளித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை அளித்த புகாா் மனு:

சிவங்கை மாவட்டத்தில் கோயில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமாா் காவல் துறை விசாரணையின்போது இறந்ததாகவும், அவரது உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்ததாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் காவல் துறை விசாரணையின்போது இதுவரை 25 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த சம்பவத்தை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வும் கண்டித்துள்ளது. எனவே, அஜித்குமாா் மரணம் தொடா்பாக உயா்நிலை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மேலும், ஏற்கெனவே காவல் துறை விசாரணையின்போது நடந்த இறப்பு சம்பவங்கள் குறித்து மாநில அரசிடம் உரிய அறிக்கையை பெற்று நடவடிக்கை எடுக்க வேண்டும். அஜித்குமாரின் குடும்பத்துக்கு உரிய நீதியும், இழப்பீடும் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நயினாா் நாகேந்திரன் தனது மனுவில் தெரிவித்துள்ளாா்.

ரயில் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

காா் விபத்து: ஐயப்பப் பக்தா் உயிரிழப்பு

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

புத்தொளி... ஸ்ரீலீலா!

சாலை பணியாளா்கள் நூதன ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT