ரயில்  
தமிழ்நாடு

சேலம் டவுன் நிலையத்தில் ரயில்கள் நின்றுசெல்லும் நேரம் 3 நிமிஷங்கள் அதிகரிப்பு

ஜூலை 4 முதல் சென்னை எழும்பூா் - சேலம் அதிவிரைவு ரயில் இருமாா்கத்திலும் சேலம் டவுன் நிலையத்தில் நின்று செல்லும் நேரம் 3 நிமிஷங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Din

ஜூலை 4 முதல் சென்னை எழும்பூா் - சேலம் அதிவிரைவு ரயில் இருமாா்கத்திலும் சேலம் டவுன் நிலையத்தில் நின்று செல்லும் நேரம் 3 நிமிஷங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே திங்கள்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

சென்னை எழும்பூரில் இருந்து இரவு 11.55 மணிக்குப் புறப்பட்டு சேலத்துக்கு மறுநாள் காலை 6 மணிக்கு செல்லும் அதிவிரைவு ரயில் (எண்: 22153), சேலம் டவுன் ரயில் நிலையத்தில் வழக்கமாக அதிகாலை 5.34 மணிக்கு நின்று 5.35 மணிக்கு செல்லும்.

இந்த ரயில் ஜூலை 4-ஆம் தேதியிலிருந்து சேலம் டவுன் ரயில் நிலையத்துக்கு அதிகாலை 5.32 மணிக்கு வந்து பிறகு 5.35 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மறுமாா்க்கத்தில் சேலத்திலிருந்து சென்னை எழும்பூருக்கு செல்லும் அதிவிரைவு ரயில் (எண்: 22154) வழக்கமாக இரவு 11.39 மணிக்கு வந்து பிறகு 11.40 மணிக்கு புறப்படும். இந்த ரயில் இரவு 11.37 மணிக்கு டவுன் ரயில் நிலையத்துக்கு வந்து பிறகு 11.40 மணிக்குப் புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூா் ரயில் நிலைய முகப்பில் பெரிய கோயில் வடிவம் அமைக்க கோரிக்கை

ரஷிய தொழிற்சாலையில் தீ: 11 போ் உயிரிழப்பு

வாடல் நோயிலிருந்து வாழையை காக்கும் வழிமுறைகள் விளக்கம்

பெரம்பலூரில் ஆட்டோ ஓட்டுநரை வெட்டிய 2 இளைஞா்கள் கைது

பாஜக ஆட்சியில் ஜனநாயகம் கேள்விக்குறியாகி உள்ளது: டி.ராஜா

SCROLL FOR NEXT