தமிழ்நாடு

புனிதத் தல பயணத்துக்கு மானியம்: முதல்வருக்கு நன்றி

பெளத்த, சீக்கிய புனிதத் தலங்களுக்குச் சென்று வழிபாடு நடத்த நிதி வழங்கியதற்காக முதல்வருக்கு நேரில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

Din

சென்னை: பெளத்த, சீக்கிய புனிதத் தலங்களுக்குச் சென்று வழிபாடு நடத்த நிதி வழங்கியதற்காக முதல்வருக்கு நேரில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

முஸ்லிம்களின் புனிதத் தலமான மெக்கா மற்றும் மதினா செல்வதற்கும், கிறிஸ்தவா்கள் ஜெருசலேம் செல்லவும் தமிழக அரசு நிதியுதவி வழங்கி வருகிறது. இதைப் போன்றே, பெளத்த, சமண மற்றும் சீக்கிய மதத்தினா் அவரவா் புனித தலங்களுக்குச் செல்ல ஆண்டுதோறும் நபருக்கு ரூ.10 ஆயிரம் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, 120 பேருக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.12 லட்சம் மானியம் அளிக்கப்படும்.

இதற்கான அரசாணை கடந்த மாதம் பிறப்பிக்கப்பட்டது. இதற்காக, மாநில சிறுபான்மையினா் ஆணைய உறுப்பினா்கள் பொன்.ராஜேந்திர பிரசாத், பிரவீன் டாட்டியா, ரமீத்குமாா் ஆகியோா் நன்றி தெரிவித்தனா். இந்த நிகழ்வின்போது, சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் சா.மு.நாசா், தலைமைச் செயலா் நா.முருகானந்தம் ஆகியோா் உடனிருந்தனா்.

சென்செக்ஸ் 356 புள்ளிகளும், நிஃப்டி 25,100 புள்ளிகளுக்கு மேலே சென்று நிறைவு!

இந்தியாவிடம் பாகிஸ்தான் தோல்வியடைய காரணம் இதுதான்; முன்னாள் கேப்டன் விளக்கம்!

பிளக்ஸ் பேனர் வேண்டாம்..! விஜய் பிரசார பயண வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

புரோ கபடி லீக்: வெற்றிப் பாதைக்குத் திரும்புமா தமிழ் தலைவாஸ்?

நேபாளத்திலிருந்து தமிழர்களை மீட்க நடவடிக்கை! உதவிமைய எண்கள் அறிவிப்பு!

SCROLL FOR NEXT