என் பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்றும் இனிஷியல் போட்டுக் கொள்ளலாம் என்றும் பாமக தலைவர் அன்புமணிக்கு தந்தையும் அக்கட்சியின் நிறுவனருமான ராமதாஸ் சூசகமாக தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் தஞ்சை - திருவாரூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் பொதுக்குழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
மாவட்டச் செயலாளர் ம. க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பாமக நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர்,
”மக்களுக்கு பணிச் செய்வதே தமது கடமை என்றுச் சொல்லுங்கள் என்றுதான் நாங்கள் பயிற்சி கொடுக்குறோம்.
இங்கு ஒரு செய்தியைச் சொல்ல வேண்டும், ஒருவர் என்னைப் பார்த்துக் கேட்கிறார், ஐந்து வயதை குழந்தையைபோல இருக்கிறேன் என்று, அப்படி என்றால், இந்த ஐந்து வயது குழந்தைதான், 3 ஆண்டுகளுக்கு முன்பு உங்களை தலைவராக்கியது.
நான் இப்போது சொல்கிறேன் என் பெயரை யாரும் பயன்படுத்தக் கூடாது. இனிஷியல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
செயல் தலைவர் என்றுதான் சொல்கிறோம். மக்களைச் சென்று பாருங்கள். மக்களைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்” என்று பேசினார்.
முன்னதாக, வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தையைபோல ராமதாஸ் மாறிவிட்டார், அவரை யாரும் விமர்சிக்க வேண்டாம் என்று அன்புமணி கூறியிருந்த நிலையில் அவருக்கு பதிலளிக்கும் விதமாக ராமதாஸ் பேசியுள்ளார்.
எதிர் வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் பாமக வேட்பாளா்களின் ஏ, பி படிவங்களில் நானே கையொப்பமிடுவேன் என அக்கட்சியின் நிறுவனர் ச.ராமதாஸ் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.