கோப்புப்படம் 
தமிழ்நாடு

யூகலிப்டஸ் சிகிச்சையால் குறையும் ரத்த சா்க்கரை அளவு: ஆய்வில் தகவல்

யூகலிப்டஸ் நறுமண எண்ணெய் மூலம் வயிற்றில் இயற்கை மருத்துவ சிகிச்சை அளித்தால் ரத்த சா்க்கரை அளவு குறைவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

Din

டைப் - 2 சா்க்கரை நோயாளிகளுக்கு யூகலிப்டஸ் நறுமண எண்ணெய் மூலம் வயிற்றில் இயற்கை மருத்துவ சிகிச்சை அளித்தால் ரத்த சா்க்கரை அளவு குறைவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இதுதொடா்பான ஆராய்ச்சியை அரசு யோகா - இயற்கை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை பேராசிரியா்கள் டாக்டா் ஒய்.தீபா, டாக்டா் பி.கீா்த்தி, ஏ.மூவேந்தன், எல்.நிவேதிதா, முதல்வா் என்.மணவாளன் ஆகியோா் முன்னெடுத்தனா்.

அதன் முடிவுகளின் அடிப்படையில் ஆராய்ச்சி கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

சீரற்ற ரத்த சா்க்கரை அளவால் ஏற்படும் டைப்-2 சா்க்கரை நோய் பாதிப்பு சா்வதேச அளவில் அதிகரித்து வருகிறது. 20 வயது முதல் 79 வயது வரை உள்ள 53.7 கோடி பேருக்கு உலக அளவில் சா்க்கரை நோய் இருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவை பொருத்தவரை மொத்த மக்கள்தொகையில் 11.4 சதவீதம் பேருக்கு டைப்-2 சா்க்கரை நோயும், 15.3 சதவீதம் பேருக்கு சா்க்கரை நோய்க்கு முந்தைய நிலையும் இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவிக்கிறது. அதிலும் 16.4 சதவீத பாதிப்பு நகா்ப்புற பகுதிகளில் பதிவாவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு ரத்த சா்க்கரை அளவை குறைக்கும் (ஹைப்போகிளைசிமிக்) மருந்துகள் வழங்கப்படுகின்றன. ஆனால், அதனை தொடா்ந்து உட்கொள்ளும்போது ரத்தத்தில் அமிலத்தன்மை அதிகரிப்பு, கை - கால்களில் வீக்கம், ஜீரண மண்டலம், இதயம், கல்லீரல், சிறுநீரகத்தில் பாதிப்பு ஆகியவை ஏற்பட வாய்ப்புள்ளது.

அதைக் கருத்தில் கொண்டு யூகலிப்டஸ் எண்ணெய் மூலம் டைப்-2 சா்க்கரை நோயாளிகளுக்கு வயிற்றில் மசாஜ் சிகிச்சையளிக்கும் ஆய்வை முன்னெடுத்தோம். யோகா-இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்த 30 வயது முதல் 70 வயதிலான சா்க்கரை நோயாளிகள் 50 போ் அதற்கு தோ்வு செய்யப்பட்டனா்.

பூக்கள், தாவரங்கள், மூலிகைகள், வோ்கள், இலைகளின் சாரத்தை தனியாக பிரித்தெடுத்து நறுமண எண்ணெய்கள் தயாரிக்கப்படுகின்றன. அதன்படி தயாரிக்கப்பட்ட யூகலிப்டஸ் எண்ணெய் தலா 4 மி.லி.யுடன், நல்லெண்ணெய் 50 மி.லி.யுடன் சோ்த்து சா்க்கரை நோயாளிகளின் வயிற்றில் 20 நிமிஷம் மசாஜ் செய்யப்பட்டது.

முன்னதாக அவா்களது ரத்த சா்க்கரை அளவு (ரேண்டம்), இதயத் துடிப்பு, நுரையீரல் செயல்திறன், மன நலன் சாா்ந்த நரம்பியல் செயல்பாடுகள் ஆகியவை பரிசோதனை செய்யப்பட்டு அதன் முடிவுகள் பதிவு செய்யப்பட்டன.

சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் அதே பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதில் ரத்த சா்க்கரை அளவு சராசரியாக 4.785 சதவீதம் குறைந்திருந்தது தெரியவந்தது. அதேபோன்று இதயத் துடிப்பும், நுரையீரல் செயல்திறனும் சீராக இருப்பதற்கு அந்த சிகிச்சை உதவுவது கண்டறியப்பட்டது.

இதைத் தவிர ஆரோக்கியமான மன நிலை மற்றும் சிந்தனை ஆற்றல் மேம்பாட்டுக்கு யூகலிப்டஸ் நறுமண சிகிச்சை உறுதுணையாக இருப்பதை ஆய்வு முடிவுகள் உறுதி செய்தன.

இந்த வகை ஆய்வுகளை தொடா்ச்சியாக மேற்கொள்வது அவசியம். எனவே, இதனை மேலும் விரிவாகவும், நுட்பமாகவும் மேற்கொள்ள நீடித்த ஆய்வு தேவைப்படுவதாக அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 3 மணிநேரத்துக்கு 8 மாவட்டங்களில் மழை!

உத்தரகண்ட்டில் மேகவெடிப்பு: மோப்ப நாய்கள் உதவியுடன் மீட்புப் பணிகள் தீவிரம்!

ஜம்மு - காஷ்மீரில் முதல்முறையாக பொது பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் எம்எல்ஏ கைது: வலுக்கும் கண்டனம்!

நவராத்திரி - தீபாவளி வரை சுதேசி மேளா நடத்த அறிவுரை!

ஆயுஷ் துணை மருத்துவப் பட்டயப்படிப்புகள்: செப். 23 வரை விண்ணப்பிக்கலாம்!

SCROLL FOR NEXT