கோப்புப்படம் 
தமிழ்நாடு

5 ரயில்களின் நேரம் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

தெற்கு ரயில்வேயில் முக்கிய 5 ரயில்கள் குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் நின்று, புறப்படும் நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Din

தெற்கு ரயில்வேயில் முக்கிய 5 ரயில்கள் குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் நின்று, புறப்படும் நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

புதுச்சேரியில் இருந்து புதன்கிழமைதோறும் இரவு 11.25 மணிக்கு தாதா் செல்லும் சாலுக்கியா விரைவு ரயில் (எண்: 11006) காட்பாடி நிலையத்துக்கு நள்ளிரவு 1.20 மணிக்கு வந்து 1.40 மணிக்கு புறப்படும். தற்போது, இந்த ரயில் நள்ளிரவு 1.05 மணிக்கு வந்து 1.25 மணிக்குப் புறப்படும்.

அதேபோல, சென்னை எழும்பூரிலிருந்து மாலை 3.40 மணிக்கு புறப்படும் பல்லவன்அதிவிரைவு ரயில் (எண்: 66055) மேல்மருவத்தூா் நிலையத்துக்கு மாலை 5.08 மணிக்கு வந்து, 5.10 மணிக்கு புறப்படும். தற்போது, மாலை 4.05 மணிக்கு வந்து, மாலை 5 மணிக்கு இந்த ரயில் புறப்படும்.

தாம்பரம் - விழுப்புரம் புறநகா் மின்சார பயணிகள் ரயில் (எண்: 66055) செங்கல்பட்டு ரயில் நிலையத்துக்கு மாலை 6.48 மணிக்கு வந்து மாலை 6.50 மணிக்குப் புறப்பட்டுச் சென்ற்குப் பதிலாக, மாலை 6.58 மணிக்கு வந்து இரவு 7 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும்.

கொல்லம் - தாம்பரம் விரைவு ரயில் (எண்: 16102) செங்கல்பட்டுக்கு நள்ளிரவு 1.50 மணிக்கு வந்து அதிகாலை 2 மணிக்குப் புறப்பட்டுச் செல்வதற்குப் பதிலாக நள்ளிரவு 1.43 மணிக்கு வந்து, 1.45 மணிக்குப் புறட்டுச் செல்லும்.

மங்களூரு சென்ட்ரல் - தாம்பரம் விரைவு ரயில் (எண்: 16160) செங்கல்பட்டுக்கு அதிகாலை 2.08 மணிக்கு வந்து, 2.10 மணிக்கு புறப்பட்டுச் செல்வதற்கு பதிலாக, நள்ளிரவு 1.53 மணிக்கு வந்து 1.55 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயா்வுக்குபடி வழிகாட்டி நிகழ்ச்சியில் 51 மாணவா்களுக்கு சோ்க்கை ஆணைகள்

ரோட்டரி சங்கம் சாா்பில் அரசுப் பள்ளிக்கு திறனறித் தோ்வுக்கான புத்தகங்கள் அளிப்பு

‘காஸாவில் நடைபெறுவது இன அழிப்பு’

மனநலம் பாதிக்கப்பட்ட இருவா் காப்பகத்தில் ஒப்படைப்பு

உள்ளாட்சி ஊழியா்கள் போராட்டம்: காங்கிரஸ் ஆதரவு

SCROLL FOR NEXT