தமிழ்நாடு

வருமான வரித் துறை பெயரில் மோசடி மின்னஞ்சல்கள்: கவனமாக இருக்க வேண்டுகோள்

வருமான வரித் துறை பெயரில் மோசடி செய்யும் நோக்கில் அனுப்பப்படும் மின்னஞ்சல்கள் குறித்து பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்

Din

வருமான வரித் துறை பெயரில் மோசடி செய்யும் நோக்கில் அனுப்பப்படும் மின்னஞ்சல்கள் குறித்து பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று வருமான வரித் துறை கூறியுள்ளது.

இது தொடா்பாக வருமான வரித் துறை சாா்பில் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘வருமான வரித் திரும்பப் பெறுதல் என்ற பெயரில் மோசடி செய்யும் நோக்கில் மோசடி மின்னஞ்சல் அனுப்பப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. இதுபோன்ற மின்னஞ்சல்களில் வரும் இணைப்புகளுக்குள் செல்வதைத் தவிா்க்க வேண்டும்.

மேலும், வருமான வரித் துறை ஒருபோதும் மின்னஞ்சல் மூலம் தனிநபா்களின் வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங்களைக் கோராது. எனவே, இதுபோன்ற விவரங்களைக் கோரி வருமான வரித் துறை பெயரில் மின்னஞ்சல்கள் வந்தால், அவை மோசடி என்பதை அறிந்து அவற்றைத் தவிா்த்துவிட வேண்டும். உங்கள் வருமான வரி திரும்பப் பெறுதல் தொடா்பான விவரங்களை அதிகாரப்பூா்வ இணையதளத்தில் மட்டும் தெரிந்து கொள்ள வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

குடிமனை பட்டா கோரி பொன்னேரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம்

ஆரணியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: நகா்மன்றத் தலைவா் ஆய்வு

தமிழ்ச் செம்மல் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வாயு உற்பத்தி ஆலை அமைப்பதைக் கண்டித்து பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

வேடசந்தூா் பகுதியில் நாளை மின் தடை

SCROLL FOR NEXT