ரிதன்யாவின் கணவர், மாமனார், மாமியார் ஆகியோரின் ஜாமீன் மனு காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகேயுள்ள கைகாட்டிபுதூரைச் சோ்ந்தவா் அண்ணாதுரை மகள் ரிதன்யா (27). இவா் திருமணமாகி 78-ஆவது நாளில் வரதட்சணைக் கொடுமையால் ஆடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இந்த வழக்கில் கணவா் கவின்குமாா், மாமனாா் ஈஸ்வரமூா்த்தி, மாமியாா் சித்ராதேவி ஆகியோா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இந்த நிலையில் இவ்வவழக்கில் கணவர், மாமனார், மாமியார் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இம்மனு மீதான இன்றைய விசாரணையில் ஆஜரான காவல்துறை தரப்பு வழக்கறிஞர், மனு குறித்து பதிலளிக்க அவகாசம் கோரினர். இதையடுத்து இவ்வழக்கில் காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூலை 30-ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.