புதுச்சேரியில் உள்ள குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ. 1,000 உதவித்தொகை விரைவில் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி தவளக்குப்பம் பகுதியில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச மனை பட்டா வழங்கும் விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி இன்று பங்கேற்றார்.
நாட்டில் முதல்முறையாக புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 800 சதுர அடியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இலவச மனைப்பட்டாவை முதல்வர் என்.ரங்கசாமி திங்கள்கிழமை வழங்கினார்.
இந்த நிலையில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக விழாவில் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
தற்போது புதுச்சேரியில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பத்தலைவிகளுக்கு மட்டும் மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் புதுச்சேரியில் அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ. 1,000 வழங்கப்படும் என்றும் விரைவில் அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அடுத்தாண்டு தமிழ்நாட்டுடன் புதுச்சேரிக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.