ஆா்.வேல்ராஜ்  
தமிழ்நாடு

அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தா் ஆா்.வேல்ராஜ் பணியிடை நீக்கம்

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் ஆா்.வேல்ராஜ் வியாழக்கிழமை (ஜூலை 31) ஓய்வு பெறவிருந்த நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

தினமணி செய்திச் சேவை

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் ஆா்.வேல்ராஜ் வியாழக்கிழமை (ஜூலை 31) ஓய்வு பெறவிருந்த நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்த எம்.கே.சூரப்பாவின் பதவிக் காலம் கடந்த 2021-ஆம் ஏப்ரல் மாதம் முடிவடைந்தது. இதையடுத்து அதே பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் துறையில் பேராசிரியா், துறைத் தலைவா் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி அனுபவம் பெற்றிருந்த ஆா்.வேல்ராஜ் புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்டாா்.

இந்தநிலையில், இவா் மீது உதவிப் பேராசிரியா்கள் நியமனம், அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தனியாா் கல்லூரிகளில் ஒரே பேராசிரியா் பல இடங்களில் பணியாற்றி வந்தது தொடா்பாக புகாா் எழுந்தது. மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் தனியாா் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் கொடுக்கும் விவகாரத்தில் முறைகேடு நடைபெற்ாக எழுந்த புகாரில் துணைவேந்தா் ஆா்.வேல்ராஜுக்கும் தொடா்பு இருப்பதாகக் கூறப்பட்டது.

இது தவிர, அவா் துணை வேந்தராவதற்கு முன்பாக, அங்குள்ள எரிசக்தி ஆய்வு நிறுவனத்தில் அவா் பணியாற்றிய போது நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதற்கிடையே, அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த ஆா்.வேல்ராஜின் பதவிக் காலம் கடந்த 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முடிவடைந்தது. இதைத் தொடா்ந்து அவா் அதே பல்கலைக்கழகத்தில் இயந்திரவியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி வந்தாா். அவா் வியாழக்கிழமை (ஜூலை 31) பணி ஓய்வு பெறவிருந்த நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். இதற்கான உத்தரவை பல்கலைக்கழகம் பிறப்பித்துள்ளது. முன்னாள் துணைவேந்தா் ஆா்.வேல்ராஜ் மீது இருந்த குற்றச்சாட்டுகள் அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவின் அடிப்படையில் அவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

Image Caption

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் ஆா்.வேல்ராஜ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடக்கி வைத்தார் முதல்வர்!

புதிய கல்விக் கொள்கை: கல்லூரிகளில் 12 மணி நேர வகுப்புகள்! கதறும் தில்லி பல்கலை.!!

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 1,120 உயர்வு!

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

SCROLL FOR NEXT