சுபாஷினி, கவின் செல்வகணேஷ் X
தமிழ்நாடு

ஆணவக் கொலை: அன்று நடந்தது என்ன? - கவினின் காதலி பரபரப்பு விடியோ!

கவினின் காதலி சுபாஷினி வெளியிட்டுள்ள விடியோ பற்றி..

இணையதளச் செய்திப் பிரிவு

கவின் செல்வகணேஷ் ஆணவக் கொலை பற்றி அவரின் காதலி சுபாஷினி விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சென்னையில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்த கவின் செல்வகணேஷ், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கேடிசி நகரைச் சோ்ந்த பெண் சித்த மருத்துவரை காதலித்து வந்துள்ளார்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சோ்ந்தவா்கள் என்பதால், அந்தப் பெண்ணின் தம்பி சுா்ஜித் (24), கவினை வெட்டிக் கொலை செய்துவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

கொலைச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில், முதல் தகவல் அறிக்கையில் சுர்ஜித் மற்றும் அவரது பெற்றோரும் காவல் உதவி ஆய்வாளர்களுமான சரவணன், கிருஷ்ணகுமாரியின் பெயர்களும் சேர்க்கப்பட்டு அவர்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இந்த ஆணவக் கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்து இன்று விசாரணையைத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் கவினின் தோழி சுபாஷினி ஒரு பரபரப்பு விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் பேசுகையில்,

"நானும் கவினும் உண்மையாக காதலித்தோம். ஆனால் நாங்கள் செட்டில் ஆக எங்களுக்கு நேரம் தேவைப்பட்டது. கடந்த மே 30 ஆம் தேதி கவினும் சுர்ஜித்தும் சந்தித்து பேசிக் கொண்டார்கள். எங்கள் காதலைப் பற்றி சுர்ஜித், அப்பாவிடம் சொல்லிவிட்டான். நீ காதலிக்கிறாயா? என்று அப்பா, என்னிடம் கேட்க நான் 'காதலிக்கவில்லை' என்று கூறிவிட்டேன்.

ஏனென்றால் கவின் என்னிடம் நேரம் கேட்டிருந்தான். 6 மாதம் கழித்து வீட்டில் கூற கவின் சொல்லியிருந்தான். ஆனால் அடுத்த 2 மாதங்களில் இப்படி ஆகிவிட்டது. கவின், சுர்ஜித்துக்கு இடையே என்ன நடந்தது என்று தெரியவில்லை.

பெண் பார்க்க வரச் சொல்லி கவினிடம் சுர்ஜித் கூறியிருப்பது மட்டும் எனக்கு தெரியும். அன்று என்ன நடந்தது என்றால், கவினின் தாத்தாவுக்கு சிகிச்சை அளிக்க கவின், அவனுடைய அம்மா, மாமா வந்திருந்தார்கள்.

நான் சிகிச்சை பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது கவினின் அம்மா, மாமாவிடம் பேசிவிட்டு கவின் வெளியே சென்றுவிட்டான். அதன்பிறகே கவினைத் தேடினோம். போன் செய்தபோது அவன் எடுக்கவில்லை. அதன்பிறகுதான் இப்படி நடந்துவிட்டது.

தேவையில்லாமல் யாரும் இஷ்டத்திற்கு வதந்தியை கிளப்ப வேண்டாம். உங்களுக்கு தோன்றுவதை எல்லாம் பேசாதீர்கள். என் அப்பா, அம்மாவுக்கு இதில் எந்த சம்மந்தமும் கிடையாது,. இதை இத்துடன் விட்டுவிடுங்கள். விட்ருங்க அவ்வளவு தான்" என்று பேசியுள்ளார்.

Kavin Selvaganesh's girlfriend Subhashini has released a video about the honor killing.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக கூட்டணியில் குழப்பம் இல்லை: சு. திருநாவுக்கரசா்

உலகளாவிய தயாரிப்புகளை இந்தியாவிற்கு கொண்டு வரும் பிலிப்ஸ்!

நெல்லையில் பரபரப்பு... காவல் நிலையம், சோதனைச் சாவடி அருகே பெட்ரோல் குண்டு வீச்சு!

தவெக நிர்வாகிகளை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்த போலீசார்!

பெண்கள் மீதான கறை மமதா பானர்ஜி: பாஜக கடும் விமர்சனம்

SCROLL FOR NEXT