கோப்புப் படம் 
தமிழ்நாடு

133 புதிய துணை மின்நிலையங்கள் அமைக்க ஒப்பந்தப் புள்ளி

தமிழகத்தில் உள்ள 12 மண்டலங்களில் 133 புதிய துணை மின்நிலையங்கள் அமைப்பதற்கான ஒப்பந்த புள்ளியை மின்வாரியம் கோரியுள்ளது.

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் உள்ள 12 மண்டலங்களில் 133 புதிய துணை மின்நிலையங்கள் அமைப்பதற்கான ஒப்பந்த புள்ளியை மின்வாரியம் கோரியுள்ளது.

தமிழகத்தில் அதிகரித்து வரும் மின்தேவைக்கு ஏற்பட மின்கட்டமைப்பை வலுப்படுத்தும் முயற்சியில் தமிழ்நாடு மின்வாரியம் ஈடுபட்டு வருகிறது. இதன்படி, பசுமை எரிசக்தி

துறைமூலம் காற்றாலை மற்றும் சூரிய மின் உற்பத்தி செய்தல், அதற்கான மின்சேமிப்பு அமைப்புகளை நிறுவுதல் உள்ளிட்ட பணிகளை மின்வாரியம் செய்துவருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் 12 மண்டலங்களில் ரூ.1319.78 கோடி மதிப்பில் 133 புதிய துணை மின்நிலையங்கள் அமைக்கவும், 11 மண்டலங்களில் ரூ.189.28 கோடி மதிப்பில் 52 புதிய மற்றும் கூடுதல் உயரழுத்த மின் மாற்றிகள் அமைக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சென்னையில் 12 புதியமின்மாற்றிகளும், காஞ்சிபுரம், வேலூா் மண்டலங்களில் தலா 20 மின்மாற்றிகளும், கோவை மண்டலத்தில் 6, ஈரோடு மண்டலத்தில் 2, மதுரை மண்டலத்தில் 9, கரூா் மண்டலத்தில் 5, திருச்சி மண்டலத்தில் 14, தஞ்சை மண்டலத்தில் 12, திருநெல்வேலி மண்டலத்தில் 8, திருவண்ணாமலை மண்டலத்தில் 14, விழுப்புரம் மண்டலத்தில் 11 புதிய மின்மாற்றிகளும் அமைக்கப்படவுள்ளன. இதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இப்பணிகளை ஆக.10-ஆம் தேதிக்குள் முடித்து, புதிய துணை மின்நிலையங்களை அமைப்பது, கூடுதல் உயரழுத்த மின்மாற்றிகள் அமைக்கும் பணியை விரைந்து தொடங்கவும் மின்வாரிய தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் தொடா்புடைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோந்தா தீவிரப் புயல்: கடைகள், வணிக வளாகங்களை மூட புதுவை அரசு உத்தரவு!

சென்னைக்கு 2 வாரம் மழை இடைவேளை!

கர்நாடக காங்கிரஸ் - அஸ்ஸாம் பாஜக வார்த்தைப் போர்!

குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கோவை வருகை!

ஒகேனக்கலில் குளிக்க, பரிசல் இயக்க அனுமதி

SCROLL FOR NEXT