குற்றால அருவி (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

7 நாள்களுக்குப் பிறகு குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி!

குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது தொடர்பாக...

DIN

7 நாள்களுக்குப் பிறகு குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கேரளத்தின் பல்வேறு மாவட்டங்கள், தமிழ்நாட்டில் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

தென்காசி மாவட்டம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து கனமழை பெய்து வந்தது.

குற்றாலம் பகுதியில் பெய்து வந்த தொடர்மழையின் காரணமாக, குற்றாலம் அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியதால் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.

பேரருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் 7ஆவது நாளாக சனிக்கிழமையும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், 7 நாள்களுக்குப் பிறகு குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிக்க: பாகிஸ்தான் உளவாளிக்கு கேரள அரசு சிவப்புக் கம்பள மரியாதை? பாஜக கேள்வி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT