உதயநிதி ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக்குறைவு! அரசு நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு!!
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது பற்றி...
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அவர் கலந்துகொள்ளவிருந்த அரசு நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உதயநிதி ஸ்டாலின் காய்ச்சல் மற்றும் தொடர் இருமலால் பாதிக்கப்பட்டுள்ளதால் சில நாள்கள் ஓய்வெடுக்க மருத்துவர் அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
Advertisement
Advertisement
"துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடும் காய்ச்சல் மற்றும் தொடர் இருமலால் அவதிப்படுவதால் அடுத்த சில நாள்களுக்கு அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.
அதனால், துணை முதல்வர் கலந்துகொள்ள இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுகின்றன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.