முதல்வர் மு.க.ஸ்டாலின் IANS
தமிழ்நாடு

பரந்தூர் விமான நிலையம்: முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!

பரந்தூர் விமான நிலைய பணிகள் குறித்து முதல்வர் ஆலோசனை...

DIN

பரந்தூர் விமான நிலையத்துக்கான அடுத்தகட்ட பணிகள் குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

சென்னையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைக்க காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் பகுதி தேர்வு செய்யப்பட்டு அனுமதி பெறப்பட்டுள்ளது.

பரந்தூர் மற்றும் சுற்றுப்புற கிராம மக்களின் எதிர்ப்புகளை மீறி, சுமார் 5,746 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

இதனிடையே பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கான திட்ட அனுமதிக்கு மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவுடன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த கூட்டத்தில், தொழில்துறை செயலாளர், தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டு கழகம்(டிட்கோ) அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்திரிக்க காங்கிரஸ் முயற்சி: ஃபட்னவீஸ்

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோருக்கான முக்கிய அறிவிப்பு!

அஞ்சல் துறையில் மாற்றம்: செப்.1 முதல் பதிவு அஞ்சல் அனுப்ப முடியாது!

பெங்களூரில் 13 வயது சிறுவன் எரித்துக் கொலை! காரணம் என்ன?

ஆணவப்படுகொலை செய்யப்பட்ட Kavin உடலுக்கு KN Nehru நேரில் அஞ்சலி!

SCROLL FOR NEXT