போரூர் மெட்ரோ Center-Center-Chennai
தமிழ்நாடு

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்

பூந்தமல்லி - போரூர் இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் இன்று நடத்தப்படுகிறது.

DIN

சென்னை: பூந்தமல்லி - போரூா் இடையே 2-ஆம் கட்ட ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நாளை மறுநாள் நடைபெறும் என மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

பூந்தமல்லி பணிமனை முதல் போரூர் வரை 9.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைக்கப்பட்டிருக்கும் மெட்ரோ ரயில் வழித்தடத்தில் ஓட்டுநரில்லா மெட்ரோ ரயிலை இயக்கி சோதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பூந்தமல்லி - போரூர் வழித்தடத்தில் சோதானை நடந்த நிலையில் இம்முறை மறுமார்க்கத்தில் சோதனை ஓட்டம் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.

சென்னையில் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதில் முக்கிய வழித்தடமான கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி நெடுஞ்சாலை இடையேயான வழித்தடத்தில், கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப் பாதையாகவும், கோடம்பாக்கம் பவா் ஹவுஸ் முதல் பூந்தமல்லி நெடுஞ்சாலை வரை மேம்பாலப் பாதையாகவும் அமைக்கப்பட்டு வருகிறது.

இப்பாதையில், பூந்தமல்லி - போரூா் இடையே பல இடங்களில் ரயில் பாதை அமைக்கும் பணி, பொறியியல் கட்டுமானப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. பூந்தமல்லி - போரூா் இடையே வரும் டிசம்பரில் ரயில் சேவை தொடங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த வழித்தடத்தில் கடந்த ஒரு சில மாதங்களாக சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்த வழித்தடத்தில் ஒரு பகுதியாக பூந்தமல்லி - முல்லைத்தோட்டம் இடையே 3 கி.மீ. தூரத்தில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலப் பாதையில் ஓட்டுநா் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்த சோதனை ஓட்டம் வெற்றியடைந்ததைத் தொடா்ந்து, பூந்தமல்லி - போரூா் வழித்தடத்தில் ஓட்டுநா் இல்லாத மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட சோதனை ஓட்டம் நடைபெற்றது.

தற்போது மறுமார்க்கத்தில் நாளை மறுநாள் சோதனை ஓட்டம் நடத்தப்படவிருக்கிறது.

இதைத் தொடா்ந்து பூந்தமல்லி - போரூா் மெட்ரோ ரயில் சேவை மக்கள் பயன்பாட்டுக்கு டிசம்பா் மாத இறுதிக்குள் கொண்டுவர வாய்ப்புள்ளதாகவும் மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை எதிர்த்து ஆக.8 முதல் ஒடிசாவில் காங்கிரஸ் போராட்டம்!

திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ கார்த்திக் தொண்டைமான்!

திருப்பூர் எஸ்எஸ்ஐ கொலை, கோவை காவல் நிலையத்தில் தற்கொலை! திமுக அரசுக்கு இபிஎஸ் கேள்வி

மத்திய அரசுத் துறைகளில் அதிகாரிப் பணி: யுபிஎஸ்சி அறிவிப்பு

அரசுத் திட்டங்களில் முதல்வர் பெயரை பயன்படுத்தலாம்! சி.வி. சண்முகத்துக்கு அபராதம் - உச்ச நீதிமன்றம்

SCROLL FOR NEXT