திருப்புகலூர் கோயில் குடமுழுக்கில் அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பில் மகேஸ். X / sekarbabu
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் இந்த 3 கோயில்களில் விரைவில் ஆன்லைன் முன்பதிவு தரிசனம்!

தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் ஆன்லைன் முன்பதிவு தரிசனம் விரைவில் கொண்டுவரப்படவுள்ளது பற்றி...

DIN

திருப்பதியைப் போல திருவண்ணாமலை, பழனி, திருச்செந்தூர் ஆகிய கோயில்களிலும் பக்தர்கள் முன்பதிவு செய்து தரிசனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

திமுக அரசு பொறுப்பேற்ற பின் நடைபெறும் 3,000-வது குடமுழுக்கு, நாகை மாவட்டம் திருப்புகலூர் அக்னீஸ்வர சுவாமி கோயிலில் இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.

இதுபற்றி செய்தியாளர்களுடன் பேசிய அமைச்சர் சேகர்பாபு,

"தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்றபின் 3,000-வது குடமுழுக்கு இன்று திருப்புகலூர் கோயிலில் நடைபெற்றுள்ளது. கோயில்களின் பராமரிப்பிற்கும் கோயில் பொக்கிஷங்களைப் பாதுகாக்கவும் முதல்வர் தொடர்ந்து நிதி ஒதுக்கி வருகிறார்.

திருப்பதியில் முன்பதிவு செய்து தரிசனம் செய்வது போன்றே தமிழ்நாட்டில் உள்ள கோயில்களிலும் ஆன்லைன் முன்பதிவு முறையில் தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை, திருச்செந்தூர், பழனி ஆகிய கோயில்களில் ஆன்லைன் முறையில் முன்பதிவு செய்து தரிசனம் செய்யும் வசதி விரைவில் கொண்டு வரப்படும்.

இதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் நடைபெறுவதாகவும் கூடிய விரைவில் முதல்வர் இதனை தொடக்கிவைப்பார்' என்று கூறியுள்ளார்.

இதையும் படிக்க | ஜூன் 7ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குறுவட்ட போட்டிகளில் வெற்றி: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

செப்.22-ல் அஞ்சல் சேவை குறைதீா் முகாம்

ஒரத்தநாடு அருகே கொலை குற்றவாளி வீட்டில் 29 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்

அக்னி தீா்த்தக் கடற்கரையில் கரை ஒதுங்கும் கடல் புற்களை அகற்ற பக்தா்கள் கோரிக்கை

தேவா் ஜெயந்தி, இமானுவேல் சேகரன் குருபூஜைக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT