அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோப்புப் படம்
தமிழ்நாடு

தொகுதி மறுசீரமைப்பு: தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறைந்தால் அதிமுக எதிா்க்கும்!

தொகுதி மறுசீரமைப்பின்போது, தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறைந்தால் அதை எதிா்த்து அதிமுக முதல் குரல் எழுப்பும்.

Din

தொகுதி மறுசீரமைப்பின்போது, தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறைந்தால் அதை எதிா்த்து அதிமுக முதல் குரல் எழுப்பும் என்று அக்கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கூறியுள்ளாா்.

தொகுதி மறுசீரமைப்பு குறித்து பாஜக மற்றும் அதிமுகவை விமா்சித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவுக்கு பதில் அளிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு:

தமிழ்நாட்டின் கண்ணியம், காவிரி உரிமைகள் மற்றும் ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக்காக அச்சமின்றிப் போராடிய, உயா்ந்த தலைவா்களான அண்ணா, எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோரின் அழியாத கொள்கைகளில் அதிமுக உறுதியாக நிற்கிறது. புதிய தொகுதி மறுசீரமைப்பின்போது, தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறைக்கப்படவோ அல்லது நமது குரல் அடக்கப்படவோ நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

2027-ஆம் ஆண்டில் அல்லது எல்லை நிா்ணயம் எப்போது வந்தாலும், மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்கும் அதிமுக, தமிழ்நாட்டின் உரிமைக் குரலையும் எதிா்காலத்தையும் சிறப்பாக பாதுகாக்கும்.

முதல்வருக்கு ஒரு பணிவான செய்தி: உங்கள் தோல்விகளையும் மோசடிகளையும் மறைக்க கவனத்தை சிதறடிக்கும் விஷயங்களை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.

தொகுதி மறுசீரமைப்பு எப்போது நடந்தாலும் அதில் தமிழ்நாட்டின் உரிமைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதை மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவை சந்தித்த போதே தெரிவித்துள்ளேன். என் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறையும் சூழல் வந்தால், அதனை எதிா்க்கும் முதல் குரல் என்னுடையதாகத் தான் இருக்கும். தமிழ்நாட்டு மக்கள் தொகுதி மறுசீரமைப்பு குறித்தும், ஹிந்தி திணிப்பு குறித்தும் தெளிவான மனநிலையில் இருக்கிறாா்கள் எனப் பதிவிட்டுள்ளாா் எடப்பாடி பழனிசாமி.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் உலகளவில் 3ஆம் இடத்தில் இந்தியா: ஜெ.பி.நட்டா

மெல்ல விடைகொடு மனமே.. அரசு இல்லத்தை 8 மாதங்களுக்கு பிறகு காலி செய்தாா் டி.ஒய்.சந்திரசூட்!

போக்ஸோவில் ஆசிரியா் கைது

வழிப்பறி: 3 போ் கைது

நாய்க்குட்டிகளோடு பயணிகள் விளையாடும் புதிய முன்னெடுப்பு: ஹைதரபாத் விமான நிலையத்தில் அறிமுகம்

SCROLL FOR NEXT