முகப்பு
தமிழ்நாடு

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு! பயணிகள் குளிக்கத் தடை!

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

Updated On : 14 ஜூன் 2025, 12:00 pm IST
ஐந்தருவி
பகிர்:

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதையடுத்து தென்காசி மாவட்டம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. கடந்த 2 தினங்களாக குளிக்கத் தடை விதிக்கப்பட்ட நிலையில், இன்றும் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதால் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகமாக இருக்கிறது.

தற்போது ஐந்தருவியில் தண்ணீர் வரத்து சற்று குறைந்துள்ளதால் அங்கு மட்டும் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.