முதல்வர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் 81 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயனுற்றதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான 4 ஆண்டுகால ஆட்சியில், முதல்வரின் விரிவான சுகாதார காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் 81 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், நாட்டின் இரண்டாவது தேசிய முதியோர் இல்லம் அமைக்கப்பட்டிருப்பதாகவும் கூறியது.
முதல்வர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ், 81,33,806 பேர் ரூ. 5,878.85 கோடி காப்பீட்டுத் தொகையுடன் பயனடைந்ததாகவும், அவர்களில் 25,80,867 பேர் ரூ. 2,750.28 கோடி காப்பீடு செலவில் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றதாகவும் தமிழக அரசின் அறிக்கையில் கூறியுள்ளது.
மேலும், 108 அவசர ஊர்தி சேவை திட்டத்தின் மூலம் 19 லட்சம் கர்ப்பிணிகள், சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்ட 14 லட்சம் பேர் உள்பட 79.85 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.
இதையும் படிக்க: டிரம்ப் எச்சரிக்கையை இந்தியா முறியடிப்பு? ஐபோன் உற்பத்தியில் மைல்கல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.