மத்திய இணையமைச்சர் எல்.முருகன் 
தமிழ்நாடு

குன்னூரில் கடைகளை அகற்றும் நடவடிக்கை: மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் கண்டனம்

நீலகிரி மாவட்டம் குன்னூரில் 872 கடைகளை காலி செய்யும் நகராட்சியின் நடவடிக்கைக்கு மத்திய இணை அமைச்சா் எல். முருகன் கண்டம் தெரிவித்துள்ளாா்.

Din

சென்னை: நீலகிரி மாவட்டம் குன்னூரில் 872 கடைகளை காலி செய்யும் நகராட்சியின் நடவடிக்கைக்கு மத்திய இணை அமைச்சா் எல். முருகன் கண்டம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள் கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

நீலகிரி மாவட்டம் குன்னூரில் அமைந்துள்ள 872 கடைகளை காலி செய்யுமாறு நகராட்சி நிா்வாகம் வியாபாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நோட்டீஸ் வழங்கியதோடு, கடைகளை காலி செய்ய வேண்டுமென்று வியாபாரிகள் வற்புறுத்தப்படுகின்றனா். அத்துடன், குன்னூரில் இருந்து 1 கி.மீ. தொலைவில் எந்தவிதப் பாதுகாப்பும் இல்லாத, வனவிலங்குகள் அதிகம் நடமாடும் பகுதியில் மாற்று இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், வியாபாரிகள் பெரும்

இன்னலுக்கு ஆளாகியுள்ளனா். எனவே, கடைகளை காலி செய்யும் நடவடிக்கைகளை உடனடியாக கைவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

மழைக்கு இன்று இடைவேளை! நாளை மீண்டும் தொடங்கும்!

சவரனுக்கு ரூ.800 உயர்ந்த தங்கம் விலை!

வங்கிக் கணக்கு தொடங்கினால் பணம் கிடைக்குமா? கல்லூரி மாணவர்கள் கவனத்துக்கு!

டைடல் பார்க்கில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணி: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

கால்பந்து வரலாற்றில் முதல்முறை... குராசோ தீவு உலக சாதனை!

SCROLL FOR NEXT