சரவணன், லட்சுமிஹர். 
தமிழ்நாடு

சாகித்ய விருதுகளுக்கு தேர்வானவர்களுக்கு முதல்வர் வாழ்த்து!

சாகித்ய விருதுகளுக்கு தேர்வானவர்களுக்கு முதல்வர் வாழ்த்து தெரிவித்தது தொடர்பாக...

DIN

பால சாகித்ய புரஸ்கார் விருதிற்கு தேர்வாகியுள்ள எழுத்தாளர் சரவணன் மற்றும் யுவ புரஸ்கார் விருதிற்கு தேர்வாகியுள்ள எழுத்தாளர் லட்சுமிஹர் ஆகியோருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் மு. க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் குழந்தைகளுக்கு வலியுறுத்தும் ‘ஒற்றைச் சிறகு ஓவியா’ நூலுக்காக சாகித்ய அகாதமியின் பால சாகித்ய புரஸ்கார்  பெறத் தேர்வாகியிருக்கும் எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு எனது மனம்நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஊஞ்சல், தேன்சிட்டு, கனவு ஆசிரியர் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையின் முன்னெடுப்புகளிலும் திறம்படப் பங்காற்றி வரும் விஷ்ணுபுரம் சரவணன் இந்த விருதுக்குத் தேர்வாகி இருப்பது கூடுதல் பெருமையும் மகிழ்ச்சியும் அளிக்கிறது.

அதேபோல, ஆழமான தம் எழுத்துகளுக்கான அங்கீகாரமாகக் ‘கூத்தொன்று கூடிற்று & பிற கதைகள்” சிறுகதைத் தொகுப்புக்காக யுவ புரஸ்கார் பெறத் தேர்வாகி இருக்கும் லட்சுமிஹருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விருது பெறும் இரு இளம் படைப்பாளிகளும் மென்மேலும் தமிழைச் செழுமைப்படுத்தும் ஆக்கங்களை தொடர்ந்து அளிக்க வேண்டும் என வாசிப்பினை பெரும் இயக்கமாக முன்னெடுத்து வரும் நமது திராவிட மாடல் அரசின் சார்பில் வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: விஷ்ணுபுரம் சரவணனுக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மருந்துகளைப் பரிந்துரைக்க வேண்டாம்: மத்திய சுகாதார அமைச்சகம்

அக்.5-ல் நெல்லை, மதுரையில் இருந்து முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கம்

பாடகர் ஸுபீன் கர்க் மரணம்: விழா ஏற்பாட்டாளர் உச்ச நீதிமன்றத்தில் மனு!

உறவுகள் நீயே... பவித்ரா ஜனனி!

அழகிய கண்ணே... ஐஸ்வர்யா மேனன்!

SCROLL FOR NEXT