உயர் நீதிமன்ற மதுரைக் கிளை DPS
தமிழ்நாடு

நித்யானந்தா எங்கு உள்ளார்? நீதிமன்றம் கேள்வி

நித்யானந்தா எங்கு உள்ளார் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியிருக்கிறது.

DIN

மதுரை: நித்யானந்தா எங்கு உள்ளார்? கைலாசா நாடு எங்கிருக்கிறது? அங்கு எப்படிச் செல்வது? என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி எழுப்பியிருக்கிறது.

மதுரை ஆதீனத்துக்குள் நுழைவது தொடர்பான உத்தரவுக்கு எதிராக நித்யானந்தா சார்பில் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, நித்யானந்தா எங்கு உள்ளார்? கைலாசா நாடு எங்கிருக்கிறது? அங்கு எப்படிச் செல்வது? பாஸ்போர்ட், விசா உள்ளதா? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியது.

இதற்கு, நித்யானந்தா கைலாசாவில் உள்ளார். ஆஸ்திரேலியா அருகே கைலாசா உள்ளது. யுஎஸ்கே என்ற நித்யானந்தா இருக்கும் நாடு ஐ.நா. அவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று நித்யானந்தாவின் சீடர் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

மதுரை ஆதீன மடத்துக்குள் நுழையக் கூடாது என்று தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து நித்யானந்தா சார்பில் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவில், புதிய வழக்குரைஞரை நியமிக்க கோரியதற்கு, மதுரை அமர்வு அனுமதி அளித்து, வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.100 கோடி அல்ல, அதற்கும் அதிகமாக வசூலித்த லோகா: அதிகாரபூர்வ அறிவிப்பு!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 9 காசுகள் உயர்ந்து ரூ.88.06 ஆக முடிவு!

ம.பி: அரசு மருத்துவமனையில் எலி கடித்து மற்றொரு பச்சிளம் குழந்தை பலி!

ஆஷஸ் தொடருக்காக ரிஸ்க் எடுக்கத் தயார்: பாட் கம்மின்ஸ்

மின் பகிர்மானக் கழகத்தில் வேலைவாய்ப்பு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

SCROLL FOR NEXT