சென்னை மெரீனா கடற்கரை சாலையில் அதிவேகமாக கார் ஓட்டிய விவகாரத்தில் காரை இயக்கிய அபிஷேக் என்பவரின் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மெரீனா கடற்கரை சாலையில் நேற்று(வெள்ளிக்கிழமை) காவலர் ஒருவர் மீது காரை ஏற்றுவதுபோல போக்கு காட்டி அதிவேகமாக கார் ஓட்டிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
காவலர் செல்வம் அளித்த புகாரில் காரை ஓட்டிய அபிஷேக், அவரது மனைவி நந்தினி மற்றும் மற்றொரு நண்பர் ஆகிய மூவரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். தான் நன்றாக கார் ஓட்டுவதாக மனைவி கூறியதால் அவ்வாறு கார் ஓட்டியுள்ளதாக அபிஷேக் தெரிவித்துள்ளார். இவர்கள் மூவரும் ஐடி ஊழியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மயிலாப்பூரைச் சேர்ந்த அபிஷேக் (25) மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் பின்பு ஜாமீனில் அவரை காவல்துறையினர் விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.