ராஜேந்திர பாலாஜி X / rajendra balaji
தமிழ்நாடு

பெரியார், அண்ணாவை விமர்சிக்கும் விடியோவை தவிர்த்திருக்கலாம்: ராஜேந்திர பாலாஜி

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி...

DIN

முருக பக்தர்கள் மாநாட்டில் அண்ணாவை விமர்சிக்கும் வகையில் விடியோ வெளியிட்டது வருத்தமளிப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

முருக பக்தா்களை ஒருங்கிணைக்கும் நோக்கில், இந்து முன்னணி சாா்பில் மதுரையில் முருக பக்தா்கள் மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் பெரியார், அண்ணாவை விமர்சிக்கும் வகையில் இந்து முன்னணி குறித்த ஒரு விடியோ ஒளிபரப்பப்பட்டது.

இதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையா? என்று திமுக உள்ளிட்ட கட்சியினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் விருதுநகரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று செய்தியாளர்களுடன் பேசுகையில்,

"முருகர் மாநாட்டில் வெளியிட்ட அந்த விடியோவை தயாரித்தது யார் என்று தெரியவில்லை. அடித்தட்டு மக்களை அதிகாரத்திற்கு கொண்டுவந்தவர் பேரறிஞர் அண்ணா. அதேபோல பெரியாரின் சமூக சீர்திருத்த கருத்துகள் நிறைய இருக்கின்றன. அது சிலருக்கு பிடிக்கலாம், சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம். அதன் வெளிப்பாடாக அந்த விடியோ இருக்கலாம்.

அண்ணா பல்வேறு பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களை சட்டப்பேரவை வரை கொண்டுவந்தவர். அண்ணாவின் கொள்கையை முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா பின்பற்றியதால்தான் நானும் சட்டப்பேரவைக்குச் சென்று அமைச்சரானேன்.

அண்ணா இல்லையெனில் என்னைப் போன்ற நபர்கள் அரசியலுக்கு வந்திருக்க முடியாது.

முருக பக்தர்கள் மாநாட்டில் நடந்த ஒரு நிகழ்வை வைத்து அதன் 99% நல்ல கருத்துகளை புறக்கணிக்க முடியாது. எனினும் பெரியார், அண்ணாவை சிறுமைப்படுத்தும் வகையில் விடியோ வெளியிட்டது வருத்தமளிக்கிறது. அந்த விடியோவை தவிர்த்திருக்கலாம்" என்று பேசியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இருசக்கர வாகனங்கள் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

வரிவிதிப்பு அழுத்தத்தை இந்தியா எதிா்கொள்ளும்: பிரதமா் மோடி

உடுமலை அரசுப் பள்ளி ஆசிரியைக்கு ‘தேசிய நல்லாசிரியா்’ விருது

எழுத்தாளா்களை ஊக்குவிப்பது சமூகக் கடமை: த.ஸ்டாலின் குணசேகரன்

அவிநாசி அருகே பெண்ணிடம் நகைப் பறிப்பு

SCROLL FOR NEXT