சைபர் குற்றம் 
தமிழ்நாடு

குண்டர் தடுப்புச் சட்டத்துக்குள் சைபர் குற்றவாளிகள்: தமிழக அரசின் நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் வரவேற்பு

இணையவழி (சைபர்) குற்றங்களை தடுக்கும் நடவடிக்கை...

DIN

தமிழகத்தில் இணையவழி (சைபர்) குற்றங்களை தடுக்கும் நடவடிக்கையாக அத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை உச்சநீதிமன்றம் வரவேற்றுள்ளது.

தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் பானுமதி என்பவரிடம் இணையவழியில் ரூ.84.50 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட பஞ்சாபைச் சேர்ந்தவொரு நபர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கடந்தாண்டு ஜூலையில் கைது செய்யப்பட்டார்.

இந்தநிலையில், இதனை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். முன்னதாக, சென்னை உயர்நீதிமன்றத்தால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், இந்த மனு நீதிபதி சந்தீப் மேத்தா, ஜோய்மால்யா பாக்சி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அதில், இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிமன்றம், அரசின் இந்த நடவடிக்கையானது வரவேற்கத்தக்கதொரு நகர்வு என்றும், வழக்கமான குற்றவியல் சட்டங்களால் குற்றவாளிகளைத் தடுக்க பயனளிக்காதபோது, அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்வது மிக நல்லதொரு நடவடிக்கை என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை புதன்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அழகும் கலையும்... கோமதி பிரியா!

மாலை நேரத்து மயக்கம்... சங்கீதா!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ.87.73 ஆக நிறைவு!

உத்தரகாசி பேரிடர்! மாயமான கேரள சுற்றுலாக் குழு கண்டுபிடிப்பு!

அளவற்ற இணையம், ஓடிடி: ரூ.1,601-க்கு வோடாஃபோன் ஐடியாவின் புதிய திட்டம்!

SCROLL FOR NEXT