குளிக்க தடை விதிக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகளின்றி வெறிச்சோடிய குற்றாலம் பேரருவி.  
தமிழ்நாடு

குற்றால பேரருவி, ஐந்தருவியில் மீண்டும் குளிக்கத் தடை

குற்றால பேரருவி, ஐந்தருவியில் குளிக்கத் தடை விதித்திருப்பது குறித்து...

DIN

தொடர் மழையால் குற்றால அருவிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால், பேரருவி, ஐந்தருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்குதொடா்ச்சிமலையில் குற்றாலம் ஐந்தருவி வனப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையின் காரணமாக ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அந்த அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது.

இதனிடையே, திங்கள்கிழமை அதிகாலை ஐந்தருவியில் தண்ணீா்வரத்து குறைந்ததால் தடை விலக்கப்பட்டு குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

இந்த நிலையில், தொடர் மழையால் குற்றால அருவிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால், பேரருவி, ஐந்தருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டுகிறது.

இதையும் படிக்க: அடுத்த 2 மணி நேரத்துக்கு 6 மாவட்டங்களில் மழை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள் - மிதுனம்

வார பலன்கள் - ரிஷபம்

வார பலன்கள் - மேஷம்

அமரன்கள் செய்த அநீதிகளைப் பேசும் தண்டகாரண்யம்..! சர்ச்சையான பதிவு?

ஆங்கிலேய ஆட்சியருக்கு தரிசனம்...

SCROLL FOR NEXT