கோப்புப்படம் 
தமிழ்நாடு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 6 மாவட்டங்களில் மழை!

காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

DIN

அடுத்த 2 மணி நேரத்துக்கு 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய மேற்கு மற்றும் அதனையொட்டிய கடலோரப் பகுதியில் மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) முதல் ஜூன் 29 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் ஜூன் 24-இல் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அடுத்த 2 மணி நேரத்துக்கு(காலை 10 மணி வரை) கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆன்லைன் வா்த்தகம்: பெண்ணிடம் ரூ.20.90 லட்சம் மோசடி

மாநில ஈட்டி எறிதல்: வேலூா் மாணவிக்கு வெள்ளி

வேலூா் புதிய பேருந்து நிலைய அனுமதியை புதுப்பிக்க ஆட்சியா் ஆய்வு

ஜூலை 31-ஆம் தேதி ஆன்லைனில் வரலட்சுமி விரத டிக்கெட் விநியோகம்

வாலிபால் போட்டி: சங்கரா பல்கலை. மாணவியா் வெற்றி

SCROLL FOR NEXT