கூலித்தொழிலாளிக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்.  
தமிழ்நாடு

கூலித்தொழிலாளிக்கு உடனடி பணி நியமன ஆணையை வழங்கிய முதல்வர்!

கூலித்தொழிலாளிக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர்.

DIN

முதல்வர் ஸ்டாலின் வேலூர் சுற்றுப் பயணத்தின்போது, வேலை வேண்டி மனு அளித்த  கூலித் தொழிலாளி பொற்செல்விக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து காட்பாடி அன்னை சத்யா காப்பகத்தில் விடுதிக் காவலராக நியமனம் செய்து, அதற்கான பணி  நியமன ஆணையினை இன்று (ஜூன் 25) வழங்கினார். 

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வேலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

அப்போது, காட்பாடி வட்டம் சேர்க்காடு கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பொற்செல்வி என்பவர் முதல்வரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதில் அவர் ஆதரவற்ற நிலையில் வறுமை சூழ்நிலையில் வாழ்வதாக மனுவில் குறிப்பிட்டிருந்தார். 

முதல்வர் ஸ்டாலினிடம் பொற்செல்வி  வழங்கிய கோரிக்கை மனுவில் தனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதாகவும், தன்னுடைய மாமனார் ஒரு மாற்றுத்திறனாளி என்பதாலும் அவர்கள் அனைவரையும், தான் கூலி வேலை செய்து காப்பாற்றி வருவதாகவும் தெரிவித்து தனக்கு ஏதேனும் ஒரு அரசுப் பணி வழங்க வேண்டும் என்று  கோரி இன்று காலை விண்ணப்பம் மனு அளித்தார்.

பொற்செல்வியின் ஏழ்மை நிலையை பரிவோடு கருதி, அவரது மனுவை உடனடியாக ஏற்றுக்கொண்டு, முதல்வர் பொற்செல்விக்கு ரூபாய் 17,000 மாத சம்பளத்தில் காட்பாடி அன்னை சத்யா காப்பகத்தின்  விடுதி காவலருக்கான பணி நியமன ஆணையை அவரிடம் வழங்கினார்.

முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்த சில மணி நேரங்களில், பணி நியமன ஆணை கிடைத்ததால், அதனை பெற்றுக் கொண்ட பொற்செல்வி அளவில்லாத  மகிழ்ச்சியோடு, முதல்வர் ஸ்டாலினை வணங்கி நன்றி தெரிவித்தார். 

இதையும் படிக்க: 2026 முதல் 10ம் வகுப்புக்கு இரண்டு பொதுத் தேர்வுகள்: சிபிஎஸ்இ

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: 30 நாள்களில் 30 லட்சம் மனுக்கள் குவிந்தன

ஆதிதிராவிடா் என்று எவ்வாறு மொழிபெயா்ப்பு செய்யப்பட்டது? தமிழக அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

‘ஜிஎஸ்டி 2.0’ எளிமையாக இருக்க வேண்டும்: காங்கிரஸ் கோரிக்கை

சென்ட்ரல் நிலைய பகுதியில் ரயில் அபாய சங்கிலி இழுத்த 96 போ் மீது வழக்கு!

ஆடி கிருத்திகை புன்னம் சண்முகநாதா் கோயிலில் சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT