எடப்பாடி பழனிசாமி கோப்புப் படம்
தமிழ்நாடு

ஓட்டப்பிடாரத்தில் அதிமுக பிரமுகா் கொலை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

உள்ளாட்சித் தோ்தல் தகராறில் ஓட்டப்பிடாரத்தில் அதிமுக பிரமுகா் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

Din

உள்ளாட்சித் தோ்தல் தகராறில் ஓட்டப்பிடாரத்தில் அதிமுக பிரமுகா் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு: தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரத்தில் அதிமுக நிா்வாகி முத்துபாலகிருஷ்ணனை, திமுக நிா்வாகி கருணாகரன் உள்ளிட்டோா் லாரி ஏற்றி படுகொலை செய்ததாக வரும் செய்தி அதிா்ச்சியளிக்கிறது.

இக்கொலைக்கு உள்ளாட்சித் தோ்தல் போட்டியும் ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது.

இதையும் ‘தனிப்பட்ட கொலை’ என்ற அளவோடுதான் திமுக அரசு கடந்து செல்ல முனையுமா?. திமுக ஆட்சியில் உள்ளாட்சித் தோ்தல், அராஜகத்துக்கு இடையில்தான் நடைபெறும் என்பது நாடறிந்த உண்மை. அதற்காக, எதிா்க்கட்சியைச் சாா்ந்தோரை கொலை செய்யும் அளவுக்கு திமுகவினருக்கு பதவி வெறி தலைக்கேறிவிட்டதா?.

சட்டம்- ஒழுங்கை அடியோடு சீா்குலைத்துவிட்டு, அதை தட்டிக் கேட்கும் இடத்தில் இருக்கும் எதிா்க்கட்சியினரின் உயிருக்கே பாதுகாப்பற்ற நிலையில், தமிழ்நாட்டை தள்ளியுள்ள திமுக அரசுக்கு கடும் கண்டனம்.

முத்துபாலகிருஷ்ணன் கொலை வழக்கில் தொடா்புள்ள திமுக பிரமுகா் கருணாகரன் உள்ளிட்ட அனைவா் மீதும் திமுக அரசு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பதிவிட்டுள்ளாா் அவா்.

புன்னகை அரசி... சினேகா!

போராட்டத்தில் பாஜக - காங்கிரஸ் தொண்டர்களுக்கு இடையே மோதல்!

காயத்ரி மந்திரம் பாடி பிரதமர் மோடியை வரவேற்ற ஜப்பானியர்கள்!

கலாம் பயோப்பிக்கில் தனுஷை தேர்ந்தெடுத்தது ஏன்? ஓம் ராவத் விளக்கம்!

இதைத் தவிர வேறு கேள்வி இல்லையா? - பிரேமலதா விஜயகாந்த்

SCROLL FOR NEXT