திமுக மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில்.  
தமிழ்நாடு

ஊதினால் அணைய நாம் என்ன தீக்குச்சியா? உதயசூரியன்: முதல்வர் ஸ்டாலின்

ஊதினால் அணைய நாம் என்ன தீக்குச்சியா? உதயசூரியன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

DIN

ஊதினால் அணைய நாம் என்ன தீக்குச்சியா? உதயசூரியன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக மாவட்டச் செயலர்கள் – தொகுதி பார்வையாளர்கள் – சார்பு அணிச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக இன்று ஆற்றிய உரையில்,

ஓரணியில் தமிழ்நாடு - திமுகவுக்கான உறுப்பினர் சேர்க்கைக்காக மட்டுமல்ல; இது தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க எல்லோரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி.

ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தில் இணைந்தவர்களில் விருப்பம் உள்ளவர்கள் திமுகவில் உறுப்பினர்களாகவும் இணைவார்கள்.

சாதி, மதம், கட்சி சார்பு என எதையும் பார்க்காமல் தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தையும் நாம் சென்றடைய வேண்டும். தமிழ்நாட்டுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக மக்களை ஒன்றிணைக்க வேண்டும்!

கீழடி உண்மைகள் புதைக்கப்படுகிறது; இந்தியைத் திணிக்கிறார்கள்; கல்வி நிதி மறுக்கப்படுகிறது; நீட் மூலம் மாணவர்கள் பலி வாங்கப்படுகிறார்கள்; தொகுதி மறுவரையறை மூலமாக நாடாளுமன்றத்தில் நம் வலிமையைக் குறைக்க சதி நடக்கிறது.

பண்பாடு, பொருளாதாரம், அரசியல் என எல்லா வகையிலும் நம் மீது வன்மத்துடன் செயல்படுகிறார்கள். ஊதினால் அணைய நாம் என்ன தீக்குச்சியா? உதயசூரியன்!. நம்மை அடக்க நினைத்தால், நம் மண், மொழி, மானத்தைக் காப்பாற்ற ஒன்றாக நின்று எதிர்ப்போம்! இதுதான் தமிழர்களின் தனிக்குணம்; ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் நோக்கமும் இதுதான்.

இந்தச் செய்தியைத் தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்திடமும் சேர்ப்போம்; அதற்காக ஜுலை 1 தொடங்கி, 45 நாட்கள் ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு நடைபெறும்.

களத்தில் செயல்படும் நாம் நான்கு படிநிலைகளில் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

Summary

CM Stalin says People should be united against the injustices being done to Tamil Nadu

புரி ரத யாத்திரையில் அதானி குடும்பத்துடன் பங்கேற்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்நாள் வசூல்: தமிழில் சாதனை படைத்த கூலி..! அதிகாரபூர்வ அறிவிப்பு!

இந்திரா காந்தியின் சாதனையை முறியடித்த மோடி!

புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் ஆவணி பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!

மெட்டாவுடன் இணைந்த தமிழக அரசு! இனி வாட்ஸ்-ஆப் மூலமே 50 சேவைகள் பெறலாம்!

ஆதிக்கத்தை எந்நாளும் எதிர்த்து நிற்போம்: துணை முதல்வர் உதயநிதி

SCROLL FOR NEXT