கொடைக்கானல் - கோப்புப்படம் 
தமிழ்நாடு

கொடைக்கானலில் சுற்றுலா தலங்களுக்குச் செல்ல அனுமதி

யானைகள் கூட்டம் இடம்பெயர்ந்ததால் கொடைக்கானலில் சுற்றுலா தலங்களுக்குச் செல்ல அனுமதி

DIN

காட்டு யானைகள் கூட்டம் முகாமிட்டிருந்ததால் கொடைக்கானலில் சுற்றுலாத்தலங்களுக்குச் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு திரும்பப்பெறப்பட்டுள்ளது.

கொடைக்கானலில் காட்டு யானைகள், இடம்பெயர்ந்து அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றதால், அங்குள்ள 12 சுற்றுலாப் பகுதிகளுக்கும், சுற்றுலா பயணிகள் செல்வதற்கு வனத்துறை அனுமதி வழங்கியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனப் பகுதியில் காட்டு யானைகள் கூட்டம் ஒன்று வெள்ளிக்கிழமை நடமாடி வந்தன. பேரிஜம் ஏரி பகுதியில் காணப்பட்ட யானைகள், சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லும் பிரதான சாலையில் சுற்றித்திரிந்தன.

இதனால் வனத்துறையினர் தீவிரமாக யானைகளைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் பாதுகாப்புக் கருதி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குணா குகை, மோயர் சதுக்கம், பைன் மர சோலை, பில்லர் ராக், பேரிஜம் ஏரி உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், யானைகள் கூட்டம் கொடைக்கானலின் முக்கிய பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து சென்றுவிட்டதால் சுற்றுலா தலங்களுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு திரும்பப் பெறப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

The ban on visiting tourist destinations in Kodaikanal has been lifted due to the presence of a herd of wild elephants.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மம்மூட்டி - மோகன்லால் படத்தின் டீசர் அப்டேட்!

கட்டுக்கடங்காத கூட்டமல்ல; கட்டுப்பாடற்ற கூட்டம்! செந்தில் பாலாஜி

மணிப்பூருக்கு உண்மை கண்டறியும் குழு செல்லாதது ஏன்? - பாஜகவுக்கு செந்தில் பாலாஜி கேள்வி!

இன்றும் நாளையும் பூஜைகளுக்கு உகந்த நேரங்கள்!

மல்லிகார்ஜுன கார்கே மருத்துவமனையில் அனுமதி!

SCROLL FOR NEXT