சென்னை உயர் நீதிமன்றம். 
தமிழ்நாடு

ராமஜெயம் கொலை வழக்கு: புலன் விசாரணை அதிகாரிகள் மாற்றம்!

ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக...

DIN

அமைச்சா் கே என். நேருவின் சகோதரர் கே என். ராமஜெயம் கொலை வழக்கின் புலன் விசாரணை அதிகாரிகளை மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு கே.என். ராமஜெயம், நடைப்பயிற்சி சென்றபோது அடையாளம் தெரியாத நபர்களால் கடத்திக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை நடந்து 13 ஆண்டுகள் ஆகியும், ஒருவரைக் கூட காவல்துறையினரால் கைது செய்ய முடியவில்லை. இது சிபிசிஐடி, சிபிஐ விசாரணைக்கும் மாற்றப்பட்டிருந்தது.

மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்ததும், இந்த கொலை வழக்கில் சந்தேகிக்கப்படும் 13 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடைபெற்றது.

அமைச்சா் கே என். நேருவின் சகோதரா் கே என். ராமஜெயம் கொலை செய்யப்பட்ட வழக்கை சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி) தற்போது விசாரித்து வருகிறது.

இந்த நிலையில், இவ்வழக்கு இன்று(மார்ச். 3) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, சிறப்பு புலனாய்வுக் குழுவில் இருந்த ஜெயக்குமார் கடலூர் எஸ்.பி. ஆக மாற்றப்பட்டதால் விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சிறப்பு புலனாய்வுக் குழுவில் இருந்த ஜெயக்குமாருக்கு பதிலாக திருச்சி சரக டி.ஐ.ஜி., தஞ்சை எஸ்.பி. ஆகியோரை, சிறப்பு புலனாய்வுக் குழுவில் கூடுதலாக நியமித்து விசாரணை மேற்கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

SCROLL FOR NEXT