முகப்பு
தமிழ்நாடு

சாா்-பதிவாளா் அலுவலகங்களில் வரும் 10-இல் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு

சாா்-பதிவாளா் அலுவலகங்களில் வரும் 10-ஆம் தேதி கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று பதிவுத் துறை தெரிவித்துள்ளது.

Updated On : 8 மார்ச் 2025, 2:26 am IST
கோப்புப் படம்
பகிர்:

சாா்-பதிவாளா் அலுவலகங்களில் வரும் 10-ஆம் தேதி கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று பதிவுத் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து, பதிவுத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மாசி மாதத்தின் சுபமுகூா்த்த தினமான மாா்ச் 10-ஆம் தேதி, ஒரு சாா் - பதிவாளா் அலுவலகங்களில் வழக்கமான 100 டோக்கன்களுக்குப் பதிலாக 150 டோக்கன்களும், 2 பதிவாளா் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்குப் பதில் 300 டோக்கன்களும் வழங்கப்படும். அதிக அளவு ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களில் 100-க்குப் பதிலாக 150 டோக்கன்களும், ஏற்கெனவே அளிக்கப்படும் 12 தட்கல் டோக்கன்களுடன் கூடுதலாக 4 டோக்கன்களும் வழங்கப்படும் என்று பதிவுத் துறையின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments