எழும்பூர் ரயில்நிலையம் 
தமிழ்நாடு

சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே 9-ஆம் தேதி ரயில் சேவை ரத்து

மார்ச் 9 அன்று சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.

DIN

சென்னை கடற்கரை - தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு இடையே, வரும் 9ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை கடற்கரையிலிருந்து எழும்பூர் இடையே அமைக்கப்பட்டிருக்கும் நான்காவது பாதையில் ரயில்களை இயக்கி சோதனை நடத்தப்படுவதால் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஞாயிற்றுக்கிழமை காலை 5.10 மணி முதல் மாலை 4.10 மணி வரை சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே வழக்கமாக இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர், அக்கோணம் வழி செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டு, இந்த ரயில்கள் தாம்பரம் வழியாக மட்டுமே இயக்கப்படும் என்றும், ரத்து செய்த ரயில்களுக்கு மாற்றாக தாம்பரம் - கோடம்பாக்கம் இடையே 30 நிமிட இடைவெளியில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் மதுபோதையில் நண்பரைக் கொன்றவர் கைது!

கோவை சுட்டுப் பிடிப்பு சம்பவம்: காவலருக்கு அரிவாள் வெட்டு!

இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா டிஎஸ்பி-யாக நியமனம்!

புகையிலை இல்லா சமுதாயம் உருவாக்க உறுதிமொழி ஏற்பு

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, புறநகரில் மழை!

SCROLL FOR NEXT