முகப்பு
தமிழ்நாடு

தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி: விஜய் பங்கேற்பு!

இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் பங்கேற்றுள்ளார்.

Updated On : 7 மார்ச், 2025 at 12:16 PM
இஃப்தார் நோன்பு திறப்புக்கு வந்த தவெக தலைவர் விஜய்..
பகிர்:

சென்னை ராயப்பேட்டையில் தமிழக வெற்றிக் கழத்தின் சார்பில் நடைபெறும் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் பங்கேற்றுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் சென்னையில் இன்று நடைபெறும் இஃப்தாா் நோன்பு நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவா் விஜய் பங்கேற்றுள்ளாா். மேலும், வழக்கமான உடை பாணியைத் தவிர்த்துவிட்டு வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை அணிந்து தலையில் தொப்பி அணிந்து இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார்.

ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தவெக தோ்தல் மேலாண்மை பொதுச்செயலா் ஆதவ் அா்ஜுனாவும் உடன் பொதுச் செயலர் ஆனந்தும் ஏற்பாடுகளை கவனித்து வருகின்றனர்.

இந்நிகழ்வில், சுமார் 2000 பேர் சாப்பிடும் வகையில் மட்டன் பிரியாணி மற்றும் நோன்புக் கஞ்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்கள், தவெக நிர்வாகிகள் உள்பட 1500-க்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர். ஒய்எம்சிஏ மைதானத்தின் அருகே அதிகளவிலான மக்கள் கூடியுள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →