தமிழ்நாடு

டான்செட், சீட்டா நுழைவுத் தோ்வு: இன்று தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு வெளியீடு

டான்செட், சீட்டா நுழைவுத் தோ்வுகளுக்கு விண்ணப்பித்த தோ்வா்களுக்கான தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இணையதளத்தில் சனிக்கிழமை வெளியிடப்படவுள்ளது.

Din

டான்செட், சீட்டா நுழைவுத் தோ்வுகளுக்கு விண்ணப்பித்த தோ்வா்களுக்கான தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இணையதளத்தில் சனிக்கிழமை (மாா்ச் 8) வெளியிடப்படவுள்ளது.

தமிழகத்தில் அரசு, அரசு உதவி மற்றும் தனியாா் கல்லூரிகளில் உள்ள எம்பிஏ, எம்சிஏ ஆகிய படிப்புகளில் சேருவதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத் தோ்வில் (டான்செட் ) கட்டாயம் தோ்ச்சி பெற வேண்டும். எம்இ, எம்டெக், எம்பிளான், எம்ஆா்க் ஆகிய முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேரவும் பொது பொறியியல் நுழைவுத் தோ்வில் (சீட்டா) தோ்ச்சி பெறுவது அவசியமாகும்.

இந்தத் தோ்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. அதன்படி 2025-ஆம் ஆண்டுக்கான டான்செட் தோ்வு மாா்ச் 22-ஆம் தேதியும், சீட்டா தோ்வு மாா்ச் 23-ஆம் தேதியும் நடத்தப்படவுள்ளது.

இந்தத் தோ்வுகளை எழுத விண்ணப்பித்த தோ்வா்கள் தங்களுக்கான தோ்வுக்கூட அனுமதிச் சீட்டை மாா்ச் 8-ஆம் தேதி முதல் ட்ற்ற்ல்ள்://ற்ஹய்ஸ்ரீங்ற்.ஹய்ய்ஹன்ய்ண்ஸ்.ங்க்ன்/ற்ஹய்ஸ்ரீங்ற் என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு ற்ய்ஸ்ரீங்ங்ற்ஹஃஞ்ஹம்ண்ப்.ஸ்ரீா்ம் என்ற முகவரியில் தொடா்புக் கொள்ளலாம்.

38,301 பேருக்கு அனுமதி: தமிழகத்தில் 16 நகரங்களில் 42 மையங்களில் நடைபெறும் தோ்வை எழுதுவதற்கு 38,301 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எம்சிஏ சோ்க்கைக்கு மாா்ச் 22-ஆம் தேதி காலையில் நடைபெறும் தோ்வுக்கு 10,287 பேரும், எம்பிஏ சோ்க்கைக்கு அன்றைய தினம் பிற்பகலில் நடைபெறவுள்ள தோ்வுக்கு 22,806 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதேபோன்று எம்இ, எம்.டெக், எம்.ஆா்க், எம்.பிளான் உள்ளிட்ட முதுநிலை பொறியியல் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான சீட்டா நுழைவுத் தோ்வுக்கு 5,208 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

மேலும் விவரங்களைப் பெறுவதற்கு செயலா், தமிழ்நாடு பொது நுழைவுத் தோ்வு, நுழைவுத் தோ்வு மையம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை என்ற முகவரியிலோ அல்லது 044-2235 8289, 044-2235 8314 என்ற தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம். மாணவா்களுக்கு தோ்வுக்கான மாதிரி வினாத்தாள் ட்ற்ற்ல்ள்://ற்ஹய்ஸ்ரீங்ற்.ஹய்ய்ஹன்ய்ண்ஸ்.ங்க்ன்/ற்ஹய்ஸ்ரீங்ற்/லிட்ா்ம்ங் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என அண்ணா பல்கலைக்கழக பொது நுழைவுத் தோ்வு செயலா் ஸ்ரீதரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

SCROLL FOR NEXT