டாஸ்மாக்கில் ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடு ஏற்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபான முறைகேடு தொடர்பாக சென்னையில் கடந்த வாரம் மார்ச் 6 ஆம் தேதியில் இருந்து 3 நாள்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்பட 7 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்கள், பணம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இதையும் படிக்க: வெற்று விளம்பரங்களால் மக்கள் வயிற்றை நிரப்ப முடியாது: இபிஎஸ்
இந்த நிலையில், இந்தச் சோதனையில் பார் உரிமங்கள் வழங்குவதிலும் அதற்கான ஒப்பந்தங்கள் வழங்குவதிலும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், உரிய ஆவணங்கள் இல்லாத நிறுவனங்களுக்கு டெண்டர் ஒதுக்கப்பட்டுள்ளது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
மதுபாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.30 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. டாஸ்மாக் உயர் அதிகாரிகள் மதுபான நிறுவனங்கள் இடையே நேரடி தொடர்பு இருந்ததற்கான ஆதாரம் சிக்கியுள்ளது.
எஸ்என்ஜே., கல்ஸ், அக்கார்டு, சைப்ல், ஷிவா டிஸ்டிலரி ஆகிய மது உற்பத்தி ஆலைகள், தேவி பாட்டில்ஸ், கிறிஸ்டல் பாட்டில்ஸ், ஜிஎல்ஆர், ஏஆர் ஹோல்டிங் ஆகிய நிறுவனங்களிலும் முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதன் மூலம், எந்த அரசு கணக்கிலும் சேராமல் ரூ.1000 கோடிக்கும் முறைகேடு நடந்தது அமலாக்கத்துறையின் அறிக்கையில் தெரியவந்துள்ளது.
இதையும் படிக்க: தமிழகம் முழுவதும் 936 இடங்களில் பட்ஜெட் நேரலை! அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.