தமிழ்நாடு

மருத்துவமனையில் இருந்து ஏ.ஆர். ரஹ்மான் டிஸ்சார்ஜ்!

ஏர்.ஆர். ரஹ்மான் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

DIN

உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் நீர்ச்சத்துக் குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். லண்டனில் இருந்து நேற்று சென்னை திரும்பிய நிலையில், இன்று(மார்ச் 16) காலை உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொடர்ந்து, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை நிறைவடைந்த நிலையில், தற்போது இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதாகத் தகவல் தெரியவந்துள்ளது.

இதையும் படிக்க: காஸாவில் போர் நிறுத்த அறிவிப்புக்குப் பின்னும் இஸ்ரேல் தாக்குதல்: 150 பேர் உயிரிழப்பு!

இது குறித்து அவருடைய மகன் ஏ.ஆர். அமீன் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”என் தந்தைக்கு நீர்ச்சத்துக் குறைபாடு காரணமாக உடல் சோர்வு ஏற்பட்டது. அதனால், சில வழக்கமான பரிசோதனைகளை மேற்கொண்டோம். அவர் நலமுடன் உள்ளார். ரசிகர்கள், குடும்பத்தினர், நலன் விரும்பிகள் அனைவருக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஏ.ஆர். ரஹ்மான் நலமாக இருப்பதாகவும், அவரின் உடல்நிலையை மருத்துவர்களிடம் விசாரித்ததாகவும் முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவில் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிடிஇஏ பள்ளிகளில் பயிலும் வடஇந்திய மாணவா்களுக்கு தமிழ்ப் போட்டிகள்

விழுப்புரம் ஆட்சியரகத்தில் மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினா் தா்னா

அன்னையின் மகா சமாதி தினம்: அரவிந்தா் ஆசிரமத்தில் கூட்டுத் தியானம்

பவர் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன் Q2 லாபம் 21% உயர்வு!

குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 474 மனுக்கள் அளிப்பு

SCROLL FOR NEXT