கனிமொழி  கோப்புப் படம்
தமிழ்நாடு

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழாசிரியர்கள் எண்ணிக்கை ‘0’: கனிமொழி

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழாசிரியர்களின் எண்ணிக்கை பூஜ்ஜியம் என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.

DIN

தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்க நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர ஆசிரியர்களின் எண்ணிக்கை '0' என்று மக்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கனிமொழி தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்க நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர ஆசிரியர்களின் எண்ணிக்கை என்ன என்ற கேள்விக்கு மத்திய அரசு அளித்துள்ள பதில் “0”.

ஆனால், ஹிந்தி கற்பிக்க 86 ஆசிரியர்களும், சமஸ்கிருதம் கற்பிக்க 65 ஆசிரியர்களும் இருப்பதாகக் கூறுகிறது மத்திய பாஜக அரசு.

இதையும் படிக்க: செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: அண்ணாமலை

அரசியலமைப்பு சட்டத்தில் ஹிந்தியோ அல்லது சமஸ்கிருதமோ தேசிய மொழி என்று வரையறுக்கப்பட்டுள்ளதா? அல்லது பாஜக கட்டமைக்க விரும்பும் தேசியம் என்பது அதுதானா? கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் வழியாக எந்த தாய்மொழியைக் காக்கிறீர்கள் அல்லது கற்றுக்கொடுக்கிறீர்கள்?

மும்மொழிக் கொள்கை என்ற போர்வையில் இப்படி ஹிந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிப்பதைத்தான் காலம் காலமாகத் திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்க்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரியநாச்சி அம்மன் கோயில் திருவிழாவில் முளைப்பாரி ஊா்வலம்

‘உங்களுடன் ஸ்டாலின்’: இன்று 12 வாா்டுகளில் முகாம்

வள்ளலாரின் சுத்த சன்மாா்க்க நெறி: உயா்நிலைக் குழு அமைக்கக் கோரிய வழக்கு முடித்து வைப்பு

அழகப்பா பல்கலை. பட்டமளிப்பு விழா: 314 பேருக்கு பட்டங்களை வழங்கினாா் ஆளுநா்

நீா்நிலைகளைத் தூா்வாரும் பணிகளில் முறைகேடு: சிபிசிஐடி விசாரிக்கக் கோரிய வழக்கு முடித்துவைப்பு

SCROLL FOR NEXT