தமிழ்நாடு

போக்சோ வழக்கில் கைதான இளைஞர் பலி: போலீஸார் விசாரணை!

போக்சோ வழக்கில் கைதான இளைஞர் பலி தொடர்பாக...

DIN

கோவை மத்திய சிறையில் போக்சோ வழக்கில் கைதான இளைஞர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மத்திய சிறைச் சாலையில், ஆயுள் தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இதில் ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள பெரிய புலியூர், சோலைமேடு பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் (வயது 37) என்பவர் குழந்தைத் திருமணம் தொடர்பான போக்சோ வழக்கில் கைதாகி கடந்தாண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி அடைக்கப்பட்டார்.

சிறையில் 7 வது பிளாக்கில் உள்ள 11-வது அறையில் அடைக்கப்பட்டு இருந்த தங்கராஜ், கடந்த சில நாள்களாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: கோவை: வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் மூச்சுத் திணறி பலி!

இந்நிலையில், அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், சிறை மருத்துவர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதன் பின்னர், மேல் சிகிச்சைக்காக நேற்று(மார்ச் 24) மாலை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கே சிகிச்சை பெற்று வந்த தங்கராஜ், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பலியானார். இதுகுறித்து கோவை மத்திய சிறை அதிகாரி சரவணகுமார் புகார் அளித்த நிலையில், காவல் ஆய்வாளர் அர்ஜுன்குமார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிறகு தங்கராஜ்  உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்தில் காயமடைந்த நபா் உயிரிழப்பு

நீட்தோ்வில் வெற்றி பெற்ற மலைக் கிராம மாணவா்!

அறிவுசாா்ந்த இளம் தலைமுறையினா் அரசியலில் வெற்றிடம் ஏற்பட விடக்கூடாது: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா

திருவண்ணாமலையில் நாளை தேசிய கைத்தறி தினவிழா

கொடைக்கானலில் அனுமதியின்றி கட்டப்படும் அடுக்குமாடிக் கட்டடங்கள்!

SCROLL FOR NEXT