முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை - கோப்புப்படம் TNDIPR
தமிழ்நாடு

தெரு நாய்க்கடி தொல்லை: முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

தமிழகத்தில் நிகழும் தெரு நாய்க்கடி தொல்லை குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

DIN

சென்னை: தெரு நாய்க்கடி தொல்லையை கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என். நேரு, மா. சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். முக்கிய துறை அதிகாரிகளும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடுவது, கருத்தடை செய்வது, கண்காணிப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் அண்மைக் காலமாக அதிக நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்தியாவில் நாய்க்கடி சம்பவங்களில் அதிகமாக நடைபெறும் மாநிலங்களில் தமிழகத்துக்கு இரண்டாவது இடம் உள்ளது. தமிழ்நாட்டில் சுமார் 13 லட்சம் தெரு நாய்கள் உள்ளதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.

மேலும், நாய்க்கடி பிரச்னைகளால் ரேபிஸ் பாதிப்பும் அதிகரித்து வருவதால் இந்த பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்து, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோசமான ஃபார்மிலிருந்து கண்டிப்பாக மீண்டு வருவேன்: சூர்யகுமார் யாதவ்

தரையிறங்க முடியாமல் திரும்பிய மோடியின் ஹெலிகாப்டர்! | செய்திகள்: சில வரிகளில் | 20.12.25

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

எம்.எஸ்.தோனி, ரிஷப் பந்த் வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

SCROLL FOR NEXT