மு.க. ஸ்டாலின் 
தமிழ்நாடு

கண்ணீர் வேண்டாம்.. கைகள் இன்றி +2 தேர்வில் சாதனை படைத்த மாணவருக்கு ஸ்டாலின் பதில்

கண்ணீர் வேண்டாம் தம்பி என்று, இரு கைகள் இன்றி பொதுத் தேர்வில் சாதித்த மாணவருக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

DIN

கைகள் இன்றி பொதுத் தேர்வில் சாதித்த மாணவருக்கு, கண்ணீர் வேண்டாம் தம்பி என தமிழக முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

தமிழ்நாடு பாடத்திட்டத்தில் பயின்று பொதுத் தேர்வு எழுதிய +2 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகின.

அதில், இரு கைகளும் இன்றி பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் 471 மதிப்பெண்கள் எடுத்து, மாற்றுத்திறனாளி மாணவர் கீர்த்திவர்மா சாதனை படைத்துள்ளார்.

இந்த நிலையில், தனக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய முதலமைச்சர் உதவ வேண்டும் என்ற கோரிக்கையை மாணவர் கீர்த்திவர்மா முன்வைத்திருந்தார்.

இந்த மாணவருக்கு பதிலளித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், கண்ணீர் வேண்டாம் தம்பி! தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்களிடம் உங்களுக்கான மருத்துவச் சிகிச்சைகளுக்கான ஏற்பாடுகளைக் கவனிக்கச் சொல்லியிருக்கிறேன் என்று பதிலளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராகுல் காந்தி நாளை காலை செய்தியாளர்களுடன் சிறப்புச் சந்திப்பு: என்ன சொல்லப் போகிறார்?

சமதா இஷ்டி யாகத்துக்கான கலசங்கள் ஒப்படைப்பு

பனித்துளி... பிரியங்கா மோகன்!

செவ்வானம்... திவ்ய பாரதி!

மேகம்... ரித்திகா நாயக்!

SCROLL FOR NEXT