முதல்வர் ஸ்டாலின் 
தமிழ்நாடு

திருச்சி பஞ்சப்பூர் பேருந்து முனையம்: திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

திருச்சி பஞ்சப்பூர் பேருந்து முனையத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

DIN

திருச்சி பஞ்சப்பூரில் ரூ. 408 கோடியில் பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை மக்கள் பயன்பாட்டுக்காகத் திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.

திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம், கனரக சரக்கு வாகனம் முனையம் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

விழாவில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய காய்கறி அங்காடிக்கும் முதல்வர் அடிக்கல் நாட்டி வைத்தார்.

திருச்சி மாவட்டத்தில் இன்று ரூ.2,343.90 கோடியில் பல்வேறு நலத்திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

பஞ்சப்பூரில் அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை முதல்வர் திறந்து வைத்து உரையாற்றினார் ஸ்டாலின். திருச்சியில் இன்று பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்கினார்.

மின் தூக்கி, நகரும் படிகட்டு, ஏசி அறைகள் என பல்வேறு வசதிகளுடன் பஞ்சப்பூர் பேருந்து முனையம் ரூ.408.36 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பேருந்து முனையத்தை திறந்துவைத்த முதல்வர், பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து வசதிகளையும் நேரில் பார்வையிட்டு அதிகாரிகளிடம் அது பற்றியும் கேட்டறிந்தார்.

பேருந்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்

இதைத்தொடர்ந்து பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் கருணாநிதி சிலையை திறந்து வைத்தும்,ரூ.408.36 கோடி மதிப்பிலான கலைஞர் மு. கருணாநிதி பேருந்து முனையத்தை திறந்து வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். பிறகு முனையத்தின் முதல் தளத்தில் நகரப் பேருந்துகளின் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

திருச்சியில் இரண்டு நாள்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வகையில் நேற்று திருச்சி வந்திருந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து முனையத்தை இன்று காலை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து ஒருங்கிணைந்த காய்கறி சந்தைக்கும் அடிக்கல் நாட்டவுள்ளாா். இதுபோன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் இன்று அவர் பங்கேற்கவிருக்கிறார்.

பேருந்து முனையம்!

வளர்ந்து வரும் திருச்சி மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைய வேண்டும் என்று நீண்ட நாட்களாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் தமிழக நகர்ப்புற அமைச்சர் கே.என்.நேருவின் பெரும் முயற்சியால் திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து. நிலையம் அமைய இடம் தேர்வு செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சிக்கு வருகை புரிந்து பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைய அடிக்கல் நாட்டினார்.

இதைத்தொடர்ந்து 115.68 ஏக்கர் பரப்பளவில் பேருந்து நிலையம் அமைய கட்டடங்கள் கட்டப்பட்டன. கடந்த 9 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் விரைவாக நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் புதிதாக கட்டி முடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பதவி காத்திருக்கு இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

செப்.12, 19-இல் தூய்மைப் பணியாளா்கள் குறைகேட்பு கூட்டம்

ராணிப்பேட்டை: கால்நடைகளைத் தாக்கும் பெரியம்மை நோய்க்கு தடுப்பூசி போடும் பணி இன்று தொடக்கம்

சீருடைப் பணிகள் தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

தொழிலாளி உயிரிழந்ததற்கு இழப்பீடு கோரி வடமாநில தொழிலாளா்கள் போராட்டம்: கற்களை வீசி தாக்கியதால் விரட்டி அடித்த போலீஸாா்

SCROLL FOR NEXT