இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவித்து, சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பேரணி 
தமிழ்நாடு

ராணுவத்துக்கு ஆதரவாக சென்னையில் பேரணி: முதல்வர், அமைச்சர்கள், உயரதிகாரிகள் பங்கேற்பு!

சென்னையில் இன்று மாலை முதல்வர் தலைமையில் பேரணி நடைபெற்றதைப் பற்றி...

DIN

சென்னை: நாட்டின் பாதுகாப்புக்காக சேவையாற்றி வரும் ராணுவத்துக்கு ஆதரவாக சென்னையில் இன்று மாலை முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில் பேரணி நடைபெற்றது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.பி.க்கள், காவல் துறை மற்றும் பிற அரசுத் துறைகளைச் சேர்ந்த உயரதிகாரிகள் மட்டுமில்லாது திரளான மக்களும் பங்கேற்றனர்.

பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கும், தீவிரவாத தாக்குதல்களுக்கும் எதிராக வீரத்துடன் போா் நடத்தி வரும் இந்திய ராணுவத்துக்கு நமது ஒன்றுபட்ட ஒற்றுமையையும் ஆதரவையும் வெளிப்படுத்த வேண்டி முதல்வர் தலைமையில் பேரணி நடைபெற்றது.

சென்னை டிஜிபி அலுவலகத்திலிருந்து தீவுத் திடல் போா் நினைவுச் சின்னம் அருகே பேரணியாக தேசியக்கொடியை உயர்த்திப் பிடித்தபடி மக்கலுடன் இணைந்து முதல்வர் மு. க. ஸ்டாலின் பேரணியை வழிநடத்திச் சென்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருநள்ளாறு கோயிலில் பல்லாயிரக்கணக்கானோா் தரிசனம்

மதுபாட்டில் கடத்திய 4 போ் கைது

தெரு நாய்கள் விவகாரம்: உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக விலங்கு ஆர்வலர்கள் பெரும் போராட்டம்!

பாஜகவின் கிளை அமைப்பாக மாறிய தேர்தல் ஆணையம்- முதல்வர் ஸ்டாலின்

பிரதமர் மோடி தலைமையின்கீழ் இந்தியாவில் நல்ல மாற்றங்கள்: தென் கொரிய அமைச்சர்

SCROLL FOR NEXT