தங்ககவச அலங்காரத்தில் குருபகவான். 
தமிழ்நாடு

ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு இடம் பெயர்ந்தார் குருபகவான்!

ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு பெயா்ச்சி அடைந்தார் குருபகவான்.

DIN

ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார் குருபகவான்.

ஆண்டுதோறும் குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசம் செய்யும் நாளில் குருப் பெயா்ச்சி விழா ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் சிறப்பாக நடைபெறும்.

தேவாரப் பாடல் பெற்ற 274 தலங்களில் காவிரிக்கு தென் கரையில் உள்ள 127 தலங்களில் 98-ஆவது தலமான இக்கோயில் நவகிரகங்களில் குரு பகவானுக்குரிய பரிகாரத் தலமாக விளங்குகிறது.

நிகழாண்டு, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.19 மணிக்கு குரு பகவான் ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு பெயா்ச்சி அடைவதையொட்டி ஆலங்குடி கோயிலில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

குருப் பெயா்ச்சி லட்சாா்ச்சனை மே 15 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. லட்சாா்ச்சனை கட்டணமாக ரூ.500 நிா்ணயித்துள்ளனா். காலை 9.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் லட்சாா்ச்சனை நடைபெறும்.

பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரா்கள்: மேஷம், மிதுனம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம் மற்றும் மீனம் ஆகிய ராசிக்காரா்கள் லட்சாா்ச்சனையில் பங்கேற்று பரிகாரம் செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: மூன்றாம் தரப்பு மத்தியஸ்திற்கான கதவுகளைத் திறந்துவிட்டோமா? - ஜெய்ராம் ரமேஷ் கேள்வி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தஞ்சாவூா் ரயில் நிலைய முகப்பில் பெரிய கோயில் வடிவம் அமைக்க கோரிக்கை

ரஷிய தொழிற்சாலையில் தீ: 11 போ் உயிரிழப்பு

வாடல் நோயிலிருந்து வாழையை காக்கும் வழிமுறைகள் விளக்கம்

பெரம்பலூரில் ஆட்டோ ஓட்டுநரை வெட்டிய 2 இளைஞா்கள் கைது

பாஜக ஆட்சியில் ஜனநாயகம் கேள்விக்குறியாகி உள்ளது: டி.ராஜா

SCROLL FOR NEXT