தமிழ்நாடு

வன்னியர் சங்க மாநாட்டிற்கு சென்ற வேன் கவிழ்ந்து விபத்து: 6 பேர் காயம்!

வன்னியர் சங்க மாநாட்டிற்கு சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது தொடர்பாக....

DIN

சீர்காழி அருகே வன்னியர் சங்க மாநாட்டிற்கு சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயம் அடைந்தனர்.

சீர்காழி அடுத்த மருவத்தூரிலிருந்து மாமல்லபுரம் வன்னியர் சங்கம் சார்பில் நடைபெறும் சித்திரை முழு நிலவு மாநாட்டிக்கு புறப்பட்டு சென்ற வேன் சீர்காழி அட்டகுளம் அருகே புறவழிச் சாலை இணைப்பு சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

வேனில் பயணம் செய்த மருவத்தூர் பகுதியை சேர்ந்த விஜய், முத்துராமன், தேவா, சுந்தர் உள்ளிட்ட ஆறு பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அருகிலிருந்தவர்கள் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு சீர்காழி அரசு மருத்துவமனை சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து வைத்தீஸ்வரன் கோவில் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

சம்பவம் குறித்து மயிலாடுதுறை எஸ்.பி. ஸ்டாலின் உடனடியாக வருகை புரிந்து நேரில் விசாரணை செய்தார்.

அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடை மீது ஏறி செல்லாமல் இருக்க வேகமாக வந்த வேன், ஓட்டுநர் வேகத்தடை இல்லாத அருகில் உள்ள எதிர்திசை சாலையில் வேனை வேகமாக திருப்பியபோது ஓட்டுநரின் அஜாக்கிரதையால் விபத்து ஏற்பட்டதாக வேனில் பயணம் செய்தவர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிக்க: ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு இடம் பெயர்ந்தார் குருபகவான்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணல் காகித மோசடி பற்றி இங்கிலாந்து வீரர் கருத்து... தனது ஸ்டைலில் நக்கலாக பதிலடி கொடுத்த ஸ்மித்!

அடர் சிவப்பில்... கயல் ஆனந்தி!

அனைவரும் கௌதம் கம்பீரையே விமர்சிப்பது ஏன்? பேட்டிங் பயிற்சியாளர் கேள்வி!

பைசன் முதல் டீசல் வரை... இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் ஏராளமான படங்கள்!

மகன் பிடித்த படங்கள்... மியா!

SCROLL FOR NEXT