பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்!
தங்கக்குதிரை வாகனத்தில் பச்சை பட்டுடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பச்சை பட்டுடுத்தி அழகர் ஆற்றில் இறங்கினால், நாடு செழிக்கும் என்று நம்பப்படுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை அழகருக்கு அணிவிக்கப்பட்டது. லட்சக்கணக்கில் திரண்டிருந்த பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என கோஷமிட்டு கள்ளழகரை வழிபட்டனர். அழகர் எழுந்தருளிய வைகையாற்றுப் பகுதியில் பக்தா்கள் பாதுகாப்பாக சுவாமி தரிசனம் செய்வதற்காக மூன்று அடுக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டன.