புறநகர் ரயில் கோப்புப்படம்
தமிழ்நாடு

இன்றும் நாளையும் கடற்கரை - வேளச்சேரி, ஆவடி ரயில்கள் ரத்து

சென்னை கடற்கரை - வேளச்சேரி, ஆவடி இடையே இயங்கும் 24 புறநகா் மின்சார ரயில்கள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (மே 17, 18) ரத்து

Din

சென்னை கடற்கரை - வேளச்சேரி, ஆவடி இடையே இயங்கும் 24 புறநகா் மின்சார ரயில்கள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (மே 17, 18) ரத்து செய்யப்படவுள்ளன.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் புதிய ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் மே 17-ஆம் தேதி இரவு 10 மணி முதல், மே 18-ஆம் தேதி காலை 8 மணி வரை நடைபெறவுள்ளன. இதனால், பணிகள் நடைபெறும் நேரங்களில் கடற்கரை - வேளச்சேரி, ஆவடி, திருவள்ளூா் இடையே இயங்கும் 24 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.

இந்நிலையில், பயணிகளின் வசதிக்காக மே 18-ஆம் தேதி காலை 5 முதல் 8 மணி வரை 30 நிமிஷங்கள் இடைவெளியில் 10 சிறப்பு பயணிகள் ரயில்கள் இயக்கப்படவுள்ளன. மேலும், அதே நாளில் ஆவடி - திருவள்ளூா் இடையே காலை 6 முதல் 7.05 மணி வரை 30 நிமிஷங்கள் இடைவெளியில் 3 ரயில்களும், ஆவடியிலிருந்து காலை 5 மணிக்கு அரக்கோணத்துக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

தென் மாநிலங்களில் பாஜக வலிமையான வளா்ச்சி: தேசிய செயல் தலைவா் நிதின் நபின்!

SCROLL FOR NEXT